கே. கேசவ ராவ்
கேகே (பிறப்பு 4 ஜூன் 1939) என்று பிரபலமாக அறியப்படும் கஞ்சர்லா கேசவ ராவ் (Kancherla Keshava Rao), பாரத் இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ராவ் முதன்முதலில் 2006 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2012 வரை பணியாற்றினார், மேலும் 2014 இல் ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலங்காணாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்காணா மற்றும் எஞ்சிய ஆந்திரப் பிரதேசத்திற்கு உறுப்பினர்களை ஒதுக்க குலுக்கல் முறை பயன்படுத்தப்பட்டதால், இவர் ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்டார். 2020 இல், தெலங்காணாவை பிரதிநிதித்துவப்படுத்தி மாநிலங்களவை உறுப்பினராக ஆறு வருட காலத்திற்கு இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கே. கேசவ ராவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் , தெலங்காணா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 ஏப்ரல் 2020 | |
நாடாளுமன்ற உறுப்பினர் , ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் 10 ஏப்ரல் 2014 – 9 ஏப்ரல் 2020 | |
பதவியில் மே 2006 – 2012 | |
தலைவர், ராஜிவ் காந்தி தொழில்நுட்பத் திட்டம் , ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 1992–1994 | |
ஆந்திரப்பிரதேசச் சட்டப்பேரவையின் துணைத் தலைவர் | |
பதவியில் 1979–1980 | |
ஆந்திரப்பிரதேசச் சட்டப்பேரவையின் உறுப்பினர் | |
பதவியில் 1979–1985 | |
தலைவர், குறைந்தபட்ச ஊதிய வாரியம், ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 1972–1979 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கஞ்சர்லா கேசவ ராவ் 4 ஏப்ரல் 1939 மகபூபாபாத், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தெலங்காணா, இந்தியா) |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி (2013 - தற்போது வரை) இந்திய தேசிய காங்கிரசு (2013 மே வரை) |
துணைவர் | வச்ந்தகுமாரி |
பிள்ளைகள் | கட்வால் விசயலட்சுமி உட்பட 4 பேர் |
வாழிடம்(s) | 312, தெலங்காணா பவன், புது தில்லி |
முன்னாள் கல்லூரி | உசுமானியா பல்கலைக்கழகம் பத்ருக்கு கல்லூரி |
வேலை | அரசியல் மற்றும் சமூக சேவகர், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளர் |
மூலம்: [1] |