கே. சட்டநாத கரையாளர்

இந்திய அரசியல்வாதி

கே. சட்டநாத கரையாளர் (K. Sattanatha Karayalar) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் திருவாங்கூர்-கொச்சின் சட்டமன்றத்திற்கு 1951 மற்றும் 1954ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுச் செங்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

இவர், 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சட்டநாத_கரையாளர்&oldid=3393300" இலிருந்து மீள்விக்கப்பட்டது