கே. சப்தங்கா

இந்திய அரசியல்வாதி

கே. சப்தங்கா (K. Sapdanga) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். ஒரு பத்திரிகையாளராகவும் செயல்பட்டார். 2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் அய்சுவால் வடக்கு 3 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மிசோரம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] முதலமைச்சராக இருந்த இலால்துகோமா தலைமையிலான இயோரம் மக்கள் இயக்கத்தின் கீழ் மிசோரம் மாநில அமைச்சரவையில் ஓர் அமைச்சராக பணியாற்றினார்.[1] உள்துறை, நகர்ப்புற மேம்பாடு & வறுமை ஒழிப்புத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறை ஆகிய துறைகள் இவருக்காக ஒதுக்கப்பட்டன.[6] இவர் இயோரம் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவராகவும் இயங்கினார்.

கே. சப்தங்கா
K. Sapdanga
Member of the மிசோரம் சட்டப் பேரவை சட்டமன்றம்
for அய்சுவால் வடக்கு 3 சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 2023
முன்னையவர்சி லால்முவான்புயா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 நவம்பர் 1958 (1958-11-15) (அகவை 65)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇயோரம் மக்கள் இயக்கம் (2017 முதல்)
பெற்றோர்
  • சால்துவமா (father)
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிவடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம்

தொழில் தொகு

கே. சப்தங்கா வாங்லைனி என்ற தின்சரியின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என செயல்பட்டார்.[7] இது மிசோரமில் மிகப் பெரிய புழக்கத்தில் உள்ள ஒரு செய்தித்தாள் ஆகும். சோனெட்டு வடத் தொலைக்காட்சியின் இணை நிறுவனரும் ஆவார்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 PTI (2023-12-08). "Zoram People's Movement leader Lalduhoma sworn in as Mizoram CM" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/mizoram-assembly/zoram-peoples-movement-leader-lalduhoma-sworn-in-as-mizoram-cm/article67617376.ece. 
  2. "K Sapdanga Election Results 2023: News, Votes, Results of Mizoram Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  3. "Member of Mizoram Legislative Assembly". mizoram.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  4. "Aizawl North - III assembly election results 2023: K. Sapdanga of ZPM defeats MNF's C. Lalmuanpuia and INC's Lal Thanzara". The Times of India. 2023-12-04. https://timesofindia.indiatimes.com/india/aizawl-north-iii-assembly-election-results-2023-k-sapdanga-of-zpm-defeats-mnfs-c-lalmuanpuia-and-incs-lal-thanzara/articleshow/105728325.cms?from=mdr. 
  5. "Aizawl North-III Assembly Election Results 2023 Highlights: ZPM's K. Sapdanga defeats MNF's C. Lalmuanpuia with 1870 votes". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  6. "Mizoram ministers list 2023: Full list of ministers and their portfolios in Lalduhoma cabinet". financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  7. "Governor Dr Hari Babu Kambhampati invites Print Media publishers for interactions and a luncheon". dipr.mizoram.gov.in. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  8. "About us". Zonet.in. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சப்தங்கா&oldid=3878808" இலிருந்து மீள்விக்கப்பட்டது