வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம்

வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் (North-Eastern Hill University) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தால் சூலை 19, 1973-ல் நிறுவப்பட்ட ஒரு மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் மேகாலயாவின் மாநிலத் தலைநகரான சில்லாங்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது உள்ளது. இப்பல்கலைக்கழகம் மேகாலயாவில் சில்லாங் மற்றும் துரா என இரு வளாகங்களைக் கொண்டுள்ளது.[3]

வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம்
North-Eastern Hill University
குறிக்கோளுரைஎழு, கட்டமை
வகைபொது, மத்தியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1973 (1973)
துணை வேந்தர்Prabha Shankar Shukla[1]
கல்வி பணியாளர்
300[2]
மாணவர்கள்4,741[2]
பட்ட மாணவர்கள்1,075[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2,729[2]
937[2]
அமைவிடம், ,
793022
,
25°36′36″N 91°54′5″E / 25.61000°N 91.90139°E / 25.61000; 91.90139
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கப் பெயர்NEHU
இணையதளம்www.nehu.ac.in

இந்தப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறந்த திறன் கொண்ட பல்கலைக்கழகம் என்ற தகுதியினை 2006-ல் பெற்றது. இது மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு இந்தியாவின் மாநிலங்களுக்காகப் பிராந்திய பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. மேலும் 1994-ல் நாகாலாந்து பல்கலைக்கழகமும் 2001-ல் மிசோரம் பல்கலைக்கழகமும்[4] இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

வளாகம்

தொகு

வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் இரண்டு கல்வி வளாகங்களைக் கொண்டுள்ளது. ஒன்று மவ்கின்ரோ-உம்ஷிங், சில்லாங்கிலும் மற்றொன்று சேசிங்ரே, துராவிலும் அமைந்துள்ளது. சில்லாங் கல்வி மற்றும் நிர்வாக செயல்பாடுகளின் தலைமையகம் ஆகும். இந்தப் பிரதான வளாகம் 1225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், இந்தியச் சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மையங்களையும் கொண்டுள்ளது.[5]

அமைப்பு மற்றும் நிர்வாகம்

தொகு

ஆளுகை

தொகு

வடகிழக்கு மலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலைவர் துணைவேந்தர் ஆவார். ஐந்தாண்டு பதவிக்காலத்திற்கான துணைவேந்தரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். மேகாலயா ஆளுநர் பல்கலைக்கழகத் தலைவர் ஆவார். துணைவேந்தரின் கீழ் இரண்டு சார்பு துணைவேந்தர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் துரா மற்றும் சில்லாங் ஆகிய இரண்டு வளாகம் ஒவ்வொன்றிற்கும் ஒருவர் எனப் பதிவாளர் ஒருவருடன் நியமிக்கப்படுகின்றனர்.[6] தற்பொழுது இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிரபா சங்கர் சுக்லா உள்ளார்.[7]

ஆரம்பத்தில், சில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைகளும் நிர்வாகமும் சில்லாங் நகரத்தில் உள்ள மூன்று முக்கிய தளங்களிலிருந்து செயல்பட்டன. அவை 1) மயூர்பஞ்ஜின் முன்னாள் மகாராஜா அரண்மனை 2) பிஜினியின் ராணியின் அரண்மனை மற்றும் 3) மேகாலயா அரசாங்க கட்டிடம் இது குதிரை லாட கட்டிடம் என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது பல்கலைக்கழகம் இதன் மைய நிர்வாகம் மவ்கின்ரோ-உம்ஷிங்கில் உள்ள முதன்மை வளாகத்திலிருந்து செயல்படுகிறது.[4]

பள்ளிகள்

தொகு

பல்கலைக்கழகத்தில் பின்வரும் பள்ளிகள், துறைகள் மற்றும் ஆய்வு மையங்கள் உள்ளன:[8]

  • பொருளியல், மேலாண்மை பள்ளி
    • வேளாண் வணிக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பம் (துரா)
    • வணிகவியல் துறை
    • பொருளாதார துறை
    • பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு
    • நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை
    • மேலாண்மைத் துறை (துரா)
    • சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மைத் துறை
  • கல்விப் பள்ளி
    • வயது வந்தோர் மற்றும் தொடர் கல்வித் துறை
    • தொலைதூரக் கல்வி மையம்
    • அறிவியல் கல்வி மையம்
    • கல்வித்துறை
    • கல்வித் துறை (துரா)
  • மனித மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி
    • மானுடவியல் துறை
    • சுற்றுச்சூழல் ஆய்வுத் துறை
    • புவியியல் துறை
    • தோட்டக்கலைத் துறை
    • கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தி
  • மானுடவியல் பள்ளி
    • ஆங்கிலத் துறை
    • ஆங்கிலத் துறை (துரா வளாகம்)
    • கரோ துறை (துரா வளாகம்)
    • இந்தி துறை
    • காசி துறை
    • மொழியியல் துறை
    • தத்துவத்துறை
  • உயிர்அறிவியல் பள்ளி
    • உயிர்வேதியியல் துறை
    • உயிர்த்தொழில்நுட்பவியல் & உயிர்தகவல்நுட்பவியல்
    • தாவரவியல் துறை
    • விலங்கியல் துறை
  • இயற்அறிவியல் பள்ளி
    • வேதியியல் துறை
    • கணிதத் துறை
    • இயற்பியல் துறை
    • புள்ளியியல் துறை
  • சமூக அறிவியல் பள்ளி
    • கலாச்சார மற்றும் ஆக்கப்பூர்வமான ஆய்வுகள் துறை
    • வரலாறு மற்றும் தொல்லியல் துறை (துரா)
    • வரலாற்றுத் துறை
    • சட்டத்துறை
    • அரசியல் அறிவியல் துறை
    • சமூகவியல் துறை
  • தொழில்நுட்ப பள்ளி
    • கட்டிடக்கலை துறை
    • அடிப்படை அறிவியல் & சமூக அறிவியல் துறை
    • உயிர்மருத்துவ தொழில்நுட்பத் துறை
    • கணினி பயன்பாடுகள் துறை
    • மின்னணு மற்றும் தகவல் துறை
    • எரிசக்தி பொறியியல் துறை
    • தகவல் தொழில்நுட்பத் துறை
    • நானோ தொழில்நுட்பத் துறை

அதிகார வரம்புகள் மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகள்

தொகு

பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பு முதலில் மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கும் பின்னர் அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய ஒன்றியப் பகுதிகளுக்கும் விரிவடைந்தது. செப்டம்பர் 6, 1994-ல் நாகாலாந்து பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் மூலம், வடகிழக்கு மலைப் பல்கலைக்கழக அதிகார வரம்பு நாகாலாந்து மாநில பகுதியில் நிறுத்தப்பட்டது. அதேபோல் மிசோரம் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் மூலம் மிசோரம் மீதான வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பும் சூன் 2001 முதல் நிறுத்தப்பட்டது. அருணாச்சல பிரதேசத்திற்கும் சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளது.

கல்வி

தொகு

நூலகம்

தொகு

மத்திய நூலகம் 1973-ல் 600 புத்தகங்களின் தொகுப்புடன் தொடங்கப்பட்டது. இதன் உறுப்பினர்களில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சிலாங் வளாகத்தில் உள்ள நிரந்தர நூலகம் வடகிழக்கு பிராந்தியத்தின் இந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டு 2006-ல் திறக்கப்பட்டது. இப்போது இங்கு 230,000 புத்தகங்கள், 38,000 பத்திரிக்கைகள் மற்றும் 316 வெளிநாட்டு மற்றும் 366 இந்திய ஆய்விதழ்களும் உள்ளன.[9]

தரவரிசை

தொகு

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பு 2020-ல் வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 90வது இடத்தையும் மற்றும் பல்கலைக்கழகங்களில் 59வது இடத்தையும் பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "President Ram Nath Kovind approves appointments of vice chancellors of 12 central universities: Ministry of education". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 13:29 IST. July 23, 2021. https://timesofindia.indiatimes.com/india/president-ram-nath-kovind-approves-appointments-of-vice-chancellors-of-12-central-universities-ministry-of-education/articleshow/84671693.cms. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "NIRF 2021" (PDF). North-Eastern Hill University.
  3. Suba TB, ed. (2012). North-Eastern Hill University: Thirty-eight Annual Report 2011-2012 (PDF). NEHU. p. v-vi. Archived from the original (PDF) on 12 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 30 July 2013. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  4. 4.0 4.1 NEHU (2013). Prospectus (PDF). North Eastern Hill University. pp. 1–6.
  5. Press Information Bureau (6 January 2006). "The Host University of Indian Science Congress: NEHU". dst.gov.in. Department of Science and Technology. Archived from the original on 2 February 2013. பார்க்கப்பட்ட நாள் 30 July 2013.
  6. "Officials". nehu.ac.in (in ஆங்கிலம்). North-Eastern Hill University, Shillong. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  7. "The Vice-Chancellor". nehu.ac.in (in ஆங்கிலம்). North-Eastern Hill University, Shillong. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  8. "Schools of study". nehu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  9. NEHU Library. "Library". nehu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 30 July 2013.

வெளி இணைப்புகள்

தொகு