தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை
தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை (National Council of Science Museums), என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயற்படுகிறது.[3] இது ஒற்றை நிர்வாக குடையின் கீழே பராமரிக்கப்படும், உலகின் மிகப்பெரிய அறிவியல் மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை நாடுமுழுவதும் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 24 அறிவியல் மையங்கள் அல்லது அருங்காட்சியகங்கள் உள்ளன. மேலும் ஒரு ஆய்வு & மேம்பாட்டு ஆய்வகமும் பயிற்சி மையமும் உள்ளன.
தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை National Council of Science Museums | |
---|---|
சுருக்கம் | NCSM |
குறிக்கோளுரை | அறிவியல் அறிமுகம் |
துவங்கியது | 4 ஏப்ரல் 1978 |
வகை | பொது |
Legal status | அரசாங்கம் |
Purpose/focus | கல்வி |
தலைமையகம் | கொல்கத்தா |
இருப்பிடம் | இந்தியா |
ஆள்கூறுகள் | 22°34′12″N 88°25′43″E / 22.57000°N 88.42861°E |
Region served | இந்தியா மற்றும் வெளிநாடு |
இயக்குனர் ஜெனரல் | அணில் சிறீகிருஷ்ணா மனேகர் |
ஊழியர் | 859 [31 மார்ச் 2011-ன் படி][1] |
வலைத்தளம் | www.ncsm.gov.in |
Remarks | பார்வையாளர்கள் 8,151,285 [31 மார்ச் 2011-ன் படி][2] |
சொந்தமாக நிர்வகிக்கப்படும் அருங்காட்சியகங்கள்
தொகு- பிர்லா தொழிலக மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், கொல்கத்தா, 2 மே 1959 அன்று தொடங்கப்பட்டது.
- பர்தாமன் அறிவியல் மையம், பாபர் பாக், 9 சனவரி 1994 அன்று தொடங்கப்பட்டது
- திக்ஹா அறிவியல் மையம் மற்றும் தேசிய அறிவியல் முகாம், புதிய திக்ஹா, 31 ஆகத்து 1997 அன்று தொடங்கப்பட்டது.
- தேன்கனல் அறிவியல் மையம், ஒரிசா, சூன் 5, 1995 அன்று தொடங்கப்பட்டது
- மாவட்ட அறிவியல் மையம், புருலியா, 15 திசம்பர் 1982 அன்று தொடங்கப்பட்டது
- கபிலாசு அறிவியல் பூங்கா, தேன்கனல், சூன் 5, 1995 அன்று தொடங்கப்பட்டது
- வடக்கு வங்காளம் அறிவியல் மையம், மத்திகரா, 17 ஆகஸ்ட் 1997 அன்று தொடங்கப்பட்டது
- மண்டல அறிவியல் மையம், புவனேசுவரம், 18 செப்டம்பர் 1989 அன்று தொடங்கப்பட்டது
- ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் நிலையம், பாட்னா, 14 ஏப்ரல் 1978 அன்று தொடங்கப்பட்டது
- வடக்கு வங்காளம் அறிவியல் மையம், சிலிகுரி, 17 ஆகத்து 1997 அன்று தொடங்கப்பட்டது
- மத்திய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆய்வகம. கொல்கத்தா, ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம், 1 முதல் சனவரி 1988ல் தொடங்கப்பட்டது பின்னர் 13 மார்ச் 1993 அன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது
- மண்டல அறிவியல் மையம், கவுகாத்தி, 15 மார்ச் 1994ல் தொடங்கப்பட்டது
- தேசிய அறிவியல் மையம், டெல்லி, 9 சனவரி 1992 முதல் தொடங்கப்பட்டது.
- நேரு அறிவியல் மையம், மும்பை, 11 நவம்பர் 1985-ல் தொடங்கப்பட்டது
- மாவட்ட அறிவியல் மையம், தரம்பூர், 1984 முதல் செயற்படுகிறது.
- கோவா அறிவியல் மையம், பானஜி, 2002 முதல் செயற்படுகிறது.
- ராமன் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம், நாக்பூர், 1992 மற்றும் 1996 முறையே செயற்படத்தொடங்கியது.
- மண்டல அறிவியல் மையம், போபால், 1995 முதல் செயற்படுகிறது
- மண்டல அறிவியல் மையம் மற்றும் கோள்ரங்கம், கோழிக்கோடு, 1997 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டில்
- அறிவியல் நகரம், கொல்கத்தா, 1 சூலை 1997 முதல் முழுமையாக செயற்படுகிறது.
- விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், பெங்களூர், 1965 முதல் செயற்படுகிறது.
- மாவட்ட அறிவியல் மையம், குல்பர்கா, 1984ஆம் ஆண்டு முதல் செயற்படுகிறது.
- மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி, 1987ஆம் ஆண்டு முதல் செயற்படுகிறது.
- மண்டல அறிவியல் மையம், திருப்பதி, 1993ஆம் ஆண்டு முதல் செயற்படுகிறது.
பல்வேறு மாநில அரசுகளுக்காக உருவாக்கப்பட்ட அறிவியல் மையங்கள்
தொகு- அருணாசலப் பிரதேசம் அறிவியல் மையம், இடாநகர், 3 டிசம்பர் 2005 அன்று தொடங்கப்பட்டது
- சத்தீஸ்கர் அறிவியல் மையம், ராய்ப்பூர், 13 சூலை 2012 அன்று தொடங்கப்பட்டது
- தார்வாட் மண்டல அறிவியல் மையம், 27 பிப்ரவரி 2012 அன்று தொடங்கப்பட்டது
- கலீம்போங் அறிவியல் மையம், டார்ஜீலிங், 2 அக்டோபர் 2008 அன்று தொடங்கப்பட்டது
- கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம், குருஷேத்ரா, 24 சூலை 2007 அன்று தொடங்கப்பட்டது
- மகாராஜா ரஞ்சித் சிங் பனோரமா, அமிர்தசரஸ், 20 சூலை 2006 அன்று தொடங்கப்பட்டது
- மணிப்பூர் அறிவியல் மையம், இம்பால், 18 மே 2005 அன்று தொடங்கப்பட்டது
- மிசோரம் அறிவியல் மையம், அய்சால் 26 சூலை 2003 அன்று தொடங்கப்பட்டது
- நாகாலாந்து அறிவியல் மையம், திமாப்பூர், 14 செப்டம்பர் 2004 அன்று தொடங்கப்பட்டது
- ராஞ்சி அறிவியல் மையம், ஜார்க்கண்ட், 29 நவம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது
- ராஜீவ் காந்தி அறிவியல் மையம், போர்ட் லூயிஸ், 30 நவம்பர் 2004 அன்று தொடங்கப்பட்டது
- மண்டல அறிவியல் மையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, 17 ஜூலை 2013 அன்று தொடங்கப்பட்டது
- அறிவியல் மையம் Port Blair, அந்தமான், 30 மே 2003 அன்று தொடங்கப்பட்டது
- ஷில்லாங் அறிவியல் மையம், மேகாலயா, 27 பிப்ரவரி 2006 அன்று தொடங்கப்பட்டது
- சிக்கிம் அறிவியல் மையம், Marchak, 22 பிப்ரவரி 2008 அன்று தொடங்கப்பட்டது
- சோலாப்பூர் அறிவியல் மையம், தென் மஹாராஷ்டிரா, 14 பிப்ரவரி 2010 அன்று தொடங்கப்பட்டது
புதிதாக வரும் அறிவியல் மையங்கள்
தொகுதேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் குழுமம் பின்வரும் இடங்களில், அந்தந்த மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அறிவியல் மையங்களை நிறுவி வருகிறது.
முதுகலை பட்டம்
தொகுஇரண்டு ஆண்டுகள், நான்கு பருவம், முழு நேரமாக கொண்ட முதுநிலை தொழில்நுட்ப பட்டம் (M. Tech.) படிப்பானது பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், பிலானியுடன் இணைந்து, கொல்கத்தா தேசிய அறிவியல் அருங்காட்சியக சபையின் (NCSM) பயிற்சி மையத்தில் 2005 முதல் நடைபெற்று வருகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Activity Report 2010-11. p-80. National Council of Science Museums publication
- ↑ Activity report 2010-11. p-80 National Council of Science Museums publication
- ↑ Ministry of Culture official website