பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம்

பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள எல்லா அறிவியல் மையங்களினதும் அருங்காட்சியகங்களினதும் தாய் நிறுவனமான அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய அவையின் கீழ் இயங்கி வருகின்றது. இந்த அருங்காட்சியகம், வரலாற்றுப் பொருட்களைச் சேகரித்து, திருத்திப் பேணுதல், அறிலியலினதும், தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சிகளைக் காட்டல், நகரப் பகுதிகளிலும் ஊரகங்களிலும் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பரப்புதல், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் புகட்டப்படும் அறிவியல் கல்விக்குத் துணையாக அமைதல், செலவு குறைந்த கருவிகளைப் பயன்படுத்தி அறிவியல் கற்பிப்பதற்கு ஆசிரியர்களைப் பயிற்றுதல், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றுக்கு உதவுதல், மாதிரிக் காட்சிப்பொருட்களை வடிவமைத்து, மேம்படுத்தி, உருவாக்குதல் என்னும் செயல்களில் இந்த அருங்காட்சியகம் ஈடுபட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு