கே. சி. கணபதி

தமிழக படகோட்டி வீரர்

கே. சி. கணபதி (K.C. Ganapathy, பிறப்பு 18 நவம்பர் 1995) என்பவர் ஒரு இந்திய தொழில்முறை படகோட்டி ஆவார். இவர் 2021 ஒலிம்பிக்கில் 49 இ ஆர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

தொழில்

தொகு
  • கே. சி. கணபதி 2010 ஆம் ஆண்டில் ஆசிய பாய்மர படகுப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். அங்கு அவர் ஆப்டிமிஸ்ட் நிகழ்வில் 8 வது இடத்தைப் பிடித்தார்.
  • 2021, கே. சி. கணபதி மற்றும் வருண் தாக்கர் ஆகிய ஜோடி 2021 ஆம் ஆண்டு ஓமனில் நடந்த முஸ்சன்னா ஓப்பன் பாய்மரப் படகுப் போட்டியில் 49 இஆர் (4.99 மீட்டர்) பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தனர். [1] மேலும் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். [2] [3]

2020 கோடைக்கால ஒலிம்பிக்

தொகு

கே. சி. கணபதி ஓமானின் முசானாவில் நடைபெற்ற 2021 முசானா ஓபன் (ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஒலிம்பிக் தகுதி) போட்டியில் முதலாவது இடத்தைப் பிடித்த கணபதி ஒலிம்பிக் விளையாட்டுகள் 2020 க்கு செல்ல இருக்கிறார். அதன்படி இவர் ஜப்பானின், டோக்கியோவில் நடக்கவிருக்கும் 2021 கோடைகால ஒலிம்பிக்கில் படகோட்டத்தில் ஸ்கிஃப் - 49 இஆர் பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்துகொள்கிறார். [4] [5] [6]

போட்டிகள் பதிவு

தொகு
INTERNATIONAL EVENTS
ஆண்டு போட்டி இடம் நிலை
2021 2021 முசானா ஓபன் சாம்பியன்சிப் ஓமன்   ஓமான் 1
2019 49 இ ஆர் உலக சாம்பியன்சிப் 2019 ஆக்லாந்து   நியூசிலாந்து 65
2019 49 இஆர் ஆசிய சாம்பியன்சிப் 2019 அபுதாபி   ஐக்கிய அரபு அமீரகம் 2
2018 49 இஆர் ஐரோப்பியசாம்பியன்சிப் 2018 போலந்து   போலந்து 25
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 ஜகார்த்தா   இந்தோனேசியா 3
2017 17 வது ஆசிய படகோட்ட சாம்பியன்சிப் ஜகார்த்தா   இந்தோனேசியா 1

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._கணபதி&oldid=3190019" இலிருந்து மீள்விக்கப்பட்டது