கே. ஜெயராம்
கே. ஜெயராம் (K. Jayaram, 1949 – 2 சூலை 2023) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இயற்கையியல் ஒளிப்படக் கலைஞர் மற்றும் சிற்றுயிர் ஒளிப்படக் கலை முன்னோடி ஆவார்.[1] இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் ஈடுபட்டுள்ளார். பல உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ளார்[2]. பிபிசி உள்ளிட்ட உலகளாவிய இதழ்களில் இவருடைய ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை வரலாறு
தொகு1962இல் தனது பதினான்கு வயதில் ஒளிப்படமியைக் கையாளத் தொடங்கிய ஜெயராம், இந்தியாவின் பிரபலமான சூழலியல் ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்தார். 1963 ஆம் ஆண்டு ஒரு போட்டியில் முதல் பரிசு வென்றதன் மூலம் இவரது ஒளிப்பட வாழ்க்கை தொடங்கியது. பூச்சிகளை படம் எடுப்பதில் இவர் சிறந்து விளங்கினார்.[3] தாவரவியல் மற்றும் உயிரியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தென்னிந்தியாவின் பட்டாம்பூச்சிகள் மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு பற்றிய புத்தகங்களை இன்னொருவருடன் இணைந்து எழுதியுள்ளார். நூலை இன்னொருவருடன் கூட்டாக எழுதியுள்ளார்.[4] மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு தவளைக்கும் (Philautus jayarami), ஒரு குதிக்கும் சிலந்தி இனத்திற்கும் (Myrmarachne jayaramani) இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[5] ஜெயராம் 1969 முதல் 2006 வரை மூன்று லட்சத்திற்கும் மிகுதியான ஒளிப்படங்களை எடுத்துள்ளார். இவரது படங்கள் பிபிசி உட்பட பல பன்னாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவர் எடுத்த ஒளிப்படங்கள் 1970 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற பன்னாட்டு ஒளிப்பட போட்டிக்கு தேர்வாயின. அதில் இவரது பூச்சி மற்றும் தேள் ஒளிப்படங்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றன. 1978 இல் இவர் ஐக்கிய இராச்சியத்தின் ராயல் போட்டோகிராஃபிக் சொசைட்டியின், ஃபெலோ ஆனார். ஐரோப்பாவில் உள்ள ஒளிப்படக் கலைக்கான பன்னாட்டு கூட்டமைப்பின் விருதையும் பெற்றார்.
ஜெயராம் 2023 சூலை 2 அன்று தனது 74 வயதில் இறந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Veteran photographer K. Jayaram, pioneer in macrophotography in India, dies in Coimbatore" (in en-IN). The Hindu. 2 July 2023. https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-photographer-k-jayaram-pioneer-in-macrophotography-in-india-dies-in-coimbatore/article67034223.ece.
- ↑ "விருதுகள்". Archived from the original on 2011-12-10. பார்க்கப்பட்ட நாள் 06 சூன் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ആദ്യം ഹോബി, പിന്നെ ലോകമറിയുന്ന വൈൽഡ്ലൈഫ് ഫോട്ടോഗ്രാഫർ; ഇനിയില്ല കെ. ജയറാം 'ഫ്രെയിം'". Mathrubhumi. 3 July 2023. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "புத்தகம்". Archived from the original on 2009-07-09. பார்க்கப்பட்ட நாள் 06 சூன் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "தவளையின் பெயர்". பார்க்கப்பட்ட நாள் 06 சூன் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)