கே. டி. வி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பூங்கா

கோயமுத்தூரிலுள்ள கல்லூரி

கே. டி. வி. ஆர்.  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பூங்கா (KTVR Knowledge Park for Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் அமைந்துள்ள தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]

கே. டி. வி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பூங்கா
Other name
KTVR KPET
வகைதனியார்
உருவாக்கம்2008-2017 (மூடப்பட்டது)
முதல்வர்முனைவர் பி. லிவிங்ஸ்டன் பீட்டர் கோல்வின்
அமைவிடம், ,
இணையதளம்www.ktvr.ac.in

கல்வி தொகு

இக்கல்லூரியானது ஐந்து இளநிலை பொறியியல் படிப்புகள் (பி.இ) மற்றும் ஒரு இளநிலை தொழில்நுட்பப் (பி.டெக்.) படிப்பை அளிக்கிறது வழங்குகிறது.

பி.இ.

  • மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் (இ.சி.இ)
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சி.எஸ்.இ)
  • மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (இஇஇ)
  • குடிசார் பொறியியல் (சி.இ)
  • இயந்திரப் பொறியியல் (எம்.இ.)

பி.டெக்

  • தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி)

சேர்க்கை நடைமுறை தொகு

இக்கல்லூரியியல் இரண்டு பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்

வழக்கமான சேர்க்கை : மாணவர்களின் 12 ஆம் வகுப்பு (உயர்நிலை சான்றிதழ்) மதிப்பெண்களின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அரசு ஒதுக்கீட்டு இடங்களானது மாநில அரசின் ஒற்றைச்சாரள கலந்தாய்வு மூலமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டமைப்பு நடைமுறைகள் மூலமாகவும் தமிழக அரசு விதிமுறைகளின்படியும் சேர்க்கை செய்யப்படுகிறது. இளநிலை படிப்பு காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.

பக்கவாட்டு சேர்க்கை : பட்டையப் படிப்பு முடித்த மாணவர்கள் அவர்களின் பட்டையப்படிப்பின் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களானது மாநில அரசின் கலந்தாய்வு மூலமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களானது ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டமைப்பு நடைமுறைகள் மூலமாகவும் தமிழக அரசு விதிமுறைகளின்படியும் சேர்க்கை செய்யப்படுகிறது. இச்சேர்கையில் படிப்புகாலமானது மூன்று ஆண்டுகளாகும். அதாவது வழங்கமான சேர்கையில் சேர்க்கப்படும் மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் இருக்கும்போது இவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு