கே. தாசன்
கே. தாசன் (K. Dasan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 13 ஆவது கேரள சட்டமன்றத்தில் கொயிலாண்டி தொகுதியின் உறுப்பினராக இவர் இருந்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) உறுப்பினராக உள்ளார்.[1]
கே. தாசன் K. Dasan | |
---|---|
கே. தாசன் | |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–2021 | |
தொகுதி | கொயிலாண்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 திசம்பர் 1952 வைய்யூர், கொயிலாண்டி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்) |
பிள்ளைகள் | ஒரு மகன், மகள் |
வாழிடம்(s) | முச்சு குன்னு, கொயிலாண்டி |
அரசியல் வாழ்க்கை
தொகுஇந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) கொயிலாண்டி தொகுதிக் குழு செயலாளராக தாசன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சேத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ), கைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆகியவற்றின் தாலுகா அளவிலான செயலாளராகவும் இருந்தார். 1978 ஆம் ஆண்டில் கொயிலாண்டி பஞ்சாயத்து வாரிய உறுப்பினராக இருந்தார். தற்போது சி.பி.ஐ.(எம்) மாவட்டக் குழு உறுப்பினர், கோழிக்கோடு; அகில இந்திய பொதுக்குழு, சி.ஐ.டி.யு. மாநிலக்குழு, சி.ஐ.டி.யு. துணைத் தலைவர், கோழிக்கோடு மாவட்டக் குழு, சி.ஐ.டி.யு. தலைவர், போன்ற பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளில் உள்ளார்.[2]
ஆண்டு | தொகுதி | நெருங்கிய போட்டியாளர் | பெரும்பான்மை
(வாக்குகள்) |
வெற்றி/தோல்வி |
---|---|---|---|---|
2011 | கொயிலாண்டி | வழக்கறிஞர் கே. பி. அணில் குமார் (காங்கிரசு) | 4139 | வெற்றி[3] |
2016 | கொயிலாண்டி | என், சுப்பிரமணியன் (காங்கிரசு) | 13369 | வெற்றி[4] |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசிறீ குங்கிராமன் மற்றும் சிறீமதி தம்பதியரின் மகனாக 1952 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கொயிலாண்டி தாலுகாவில் உள்ள வைய்யூரில் தாசன் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை படித்தார். சுலோச்சனா என்பவரை மணந்துகொண்டார். தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shri. K. DASAN". Niyamasabha. Archived from the original on 13 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
- ↑ "Quilandy Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
- ↑ "Quilandy Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.