கே. பிரதிபா பாரதி

இந்திய அரசியல்வாதி

கே. பிரதிபா பாரதி (K. Pratibha Bharati) (பிறப்பு: பிப்ரவரி 6, 1956) இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] அவர் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆவார்.[2] (1999 – 2004 [3] ). ஆந்திராவின் வரலாற்றில் முதல் பெண் சபாநாயகரும் இவரே ஆவார். இவர் சமூக நலத்துறை அமைச்சராக 1983, 1985 ஆண்டுகளிலும் மற்றும் 1994 மற்றும் 1998 ஆண்டுகளில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார். அவர் தெலுங்கு தேசம் என்ற இந்திய பிராந்திய கட்சியின் உறுப்பினர் ஆவார்.[4]

கே. பிரதிபா பாரதி
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் சபாநாயகர்
பதவியில்
1999–2004
முன்னையவர்யானைமலை ராம கிருஷ்ணுடு
பின்னவர்கே. ஆர். சுரேஷ் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 பிப்ரவரி 1956
காவலி, சிறீகாகுளம், சிறீகாகுளம் மாவட்டம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காவலியில் அரசியல் ரீதியாக சுறுசுறுப்பான தலித் குடும்பத்தில் பிரதிபா பாரதி பிறந்தார்.[1] அவரது தந்தை ( கே. புண்ணையா ) மற்றும் தாத்தா ( கே. நாராயணா ) முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றினர்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Pratibha Bharati is Andhra Pradesh Assembly's first woman to officially be a Speaker of AP". The Indian Express. 12 November 1999. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19991112/ipo12001.html. பார்த்த நாள்: 25 December 2010. 
  2. "TDP activists stage protest". The Hindu. 23 December 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article971267.ece. பார்த்த நாள்: 25 December 2010. 
  3. S. NAGESH KUMAR W. CHANDRAKANTH (22 May – 4 June 2004). "A popular backlash". Frontline இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090701065553/http://www.hinduonnet.com/fline/fl2111/stories/20040604009012700.htm. பார்த்த நாள்: 25 December 2010. 
  4. "AP Assembly urges Centre to amend Statute". The Indian Express. 12 November 1999. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19991112/ipo12003.html. பார்த்த நாள்: 25 December 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பிரதிபா_பாரதி&oldid=3926595" இலிருந்து மீள்விக்கப்பட்டது