கே. ஹேமலதா
கே.ஹேமலதா (K. Hemalata) ஒரு இந்திய பெண் மார்க்சிச அரசியல்வாதியும் மற்றும் இந்திய இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்திய குழு உறுப்பினரும் ஆவார். இந்தியாவில் தொழிற்சங்கங்கள் இயக்கத்தின் வரலாற்றில் முதல் தேசிய அளவிலான பெண் தலைவி ஆவார்.
வாழ்க்கை
தொகுஹேமலதா ஆந்திராவில் பிறந்தார். ஒடிசாவின் பெர்காம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படித்தார். 1973 ஆம் ஆண்டில், நெல்லூரில் உள்ள புச்சலப்பள்ளி சுந்தரய்யாவின் 'மக்கள் மருந்தகத்தில்' ஹேமலதா மருத்துவராக சேர்ந்தார். அப்போதிருந்து அவர் மார்க்சிய அரசியலில் தீவிரமாக இருந்தார், அதே போல் மச்சிலிபட்டணத்தில் மருத்துவ பயிற்சியையும் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டில் நகராட்சி உறுப்பினரானார், 1995 ஆம் ஆண்டில் அவர் மருத்துவத் தொழிலை விட்டு விலகினார். தொழிற்சங்க இயக்கத்தில் முழு நேரப் பணியில் ஈடுபட்டார். [1] ஹேமலதா ஆந்திராவில் சி.ஐ.டி.யுவின் மாநில செயலாளரானார். 1998 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களின் அகில இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பணியிலும் அவர் நியமிக்கப்பட்டார். நவம்பர் 2016 இல் பூரியில் நடைபெற்ற 15 வது தேசிய மாநாட்டில் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) தலைவராக ஹேமலதா தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4] இந்தியப் பொதுவுடமைக் கட்டசியின் (மார்க்சிஸ்ட்) 22 வது கட்சி காங்கிரசில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழுவில் உறுப்பினரானார். [5]
குறிப்புகள்
தொகு- ↑ Pioneer, The. "A first: Woman elected CITU president". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.
- ↑ Desk, Narada (2016-12-01). "K Hemalata - the first woman president in India's trade union history". naradanews.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-07-31. பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.
- ↑ "ALL INDIA OFFICE BEARERS". citucentre.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.
- ↑ "‘NDA govt. hell-bent on weakening PSUs in country’". https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/nda-govt-hell-bent-on-weakening-psus-in-country/article25395286.ece.
- ↑ "Full list: CPI(M) newly elected central committee and politburo members". The Indian Express (in Indian English). 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.