கைசர் தோட்டம்

இந்தியாவின் லக்னோ நகரில் உள்ள அரண்மனை வளாகம்

கைசர் தோட்டம் (Qaisar Bagh) இந்தியாவின் அவத் மண்டலத்திலுள்ள லக்னோ நகரத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனை வளாகமாகும். கைசர் பாக், கயிசர் பாக் என்ற பெயர்களாலும் இந்த அரண்மனை அறியப்படுகிறது. அவத் மண்டலத்தை 1847 ஆம் ஆண்டு முதல் 1856 ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்த கடைசி நவாபு வாசித்து அலி சா கைசர் தோட்டம் எனப்படும் இந்த அரண்மனை வளாகத்தை கட்டினார்.[1][2]

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கைசர் தோட்ட வளாகம். (1865 மற்றும் 1882) காலத்திற்கிடையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, ​​எழுச்சியில் முக்கிய பங்கு வகித்த அவத் பகுதியின் பேகம் அசுரத்து மகாலின் கோட்டையாக இந்த அரண்மனை பயன்படுத்தப்பட்டது.[3]

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஐரிசு நாட்டுப் பத்திரிகையாளர் வில்லியம் ஓவார்டு ரசல், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது 1858 ஆம் ஆண்டு குடிபோதையில் இருந்த பிரித்தானிய துருப்புக்களால் கைசர் தோட்டம் கொள்ளையடிக்கப்பட்டதைப் பற்றிய ஒரு உன்னதமான கட்டுரையை எழுதினார்.[4] விக்டோரியா மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கைசர் பாக் தோட்டத்திலிருந்து ஓர் உணவகம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது, தற்போது இது வின்ட்சர் கோட்டையில் உள்ள பிராக்மோர் தோட்டத்தில் உள்ளது.[5]

அரண்மனையின் பெரும்பகுதி பிரித்தானிய சிப்பாய்களால் அழிக்கப்பட்டு இடிந்து கிடக்கும் போதிலும், தற்போது இது லக்னோவின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.[3]

கைசர் தோட்டம், லக்னோ.1866
1858 ஆம் ஆண்டில் லக்னோவில் உள்ள கைசர் பாக் மீண்டும் கைப்பற்றப்பட்ட பிறகு, பிரித்தானிய வீரர்கள் கொள்ளையடித்ததை இலண்டன் "டைம்சு" நிருபர் "வில்லியம் ஓவார்டு ரசல் சாட்சி.

மேற்கோள்கள்

தொகு
  1. "General View of the Palace in Kaiser Bagh, Lucknow (by H.A. Mirza & Sons)". Images of Asia. 1910. Archived from the original on 5 January 2010. பார்க்கப்பட்ட நாள் 2009-08-14.
  2. "The Walled Palaces of Kaiserbagh (by Anil Mehrotra Neeta Das)". Zeno Marketing Communications. Inc. Archived from the original on 29 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-14.
  3. 3.0 3.1 "Kaiserbagh Palace Complex". Times of India. 26 November 2016. https://timesofindia.indiatimes.com/travel/destinations/kaiserbagh-palace-complex/articleshow/47675089.cms. 
  4. Ferdinand Mount, "Atrocity upon atrocity",Times Literary Supplement, 23 February 2018, page 14.
  5. வார்ப்புரு:NHLE

வெளி இணைப்புகள்

தொகு

26°51′24.57″N 80°55′34.92″E / 26.8568250°N 80.9263667°E / 26.8568250; 80.9263667

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைசர்_தோட்டம்&oldid=4089640" இலிருந்து மீள்விக்கப்பட்டது