பேகம் அசரத் மகால்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

பேகம் அசரத் மஹால் 1857 இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்ட வீரப்பெண்மணி ஆவார். அசரத் பேகம் ஆவாதில் உள்ள ஃபைசாபாத்தில் பிறந்தவர்.[1] எனவே ஆவாத் பேகம் என்றும் அறியப்பட்டார்.இவர் 1820ஆம் ஆண்டில் பிறந்தார்

பேகம் அசரத் மகால்
ஆவாத் நவாபின் பேகம்
பேகம் அசரத் மகால்
பிறப்புதோராயமாக கி.பி. 1820[சான்று தேவை]
பைசாபாத், ஆவாத், இந்தியா
இறப்புதோராயமாக கி.பி. 1879
காத்மாண்டு, நேபாளம்
துணைவர்வாஜித் அலி ஷா
மதம்இசுலாம்

1857–58 கிளர்ச்சியின் போது பேகம் தனது ஆதரவாளர்களோடு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டார். லக்னோவைக் கைப்பற்றவும் செய்தார். ஆனால் மீண்டும் ஆங்கிலப் படையிடம் லக்னோவை இழக்க நேரிட்டதால் பேகம் பின்வாங்கினார். இந்திய மன்னர்கள் யாரும் புகலிடம் அளிக்க முன்வராததால் நேபாளத்திற்குத் தப்பி ஓடினார் பேகம். அங்கும் அவருக்குப் புகலிடம் மறுக்கப்பட்டது.[2] பின்னர் தங்க அனுமதிக்கப்பட்டார். இமயமலைக் காடுகளிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்தார் பேகம்.

லக்னோவில் அமைந்துள்ள பேகம் அசரத் மகாலின் நினைவகத்தின் தோற்றம்

லக்னோவில் அசரத் பேகமின் நினைவாக பளிங்குக் கல்லால் ஆன நினைவகத்தை மாநில அரசு அமைத்துள்ளது. இந்திய அரசும் பேகமின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Begum Hazrat Mahal Summary & Analysis". BookRags.com. 2010-11-02. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.
  2. Christopher Hibbert (1980) The Great Mutiny, India 1857, Harmondsworth: Penguin; pp. 374-375
  3. "Begum Hazrat Mahal". Indianpost.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_அசரத்_மகால்&oldid=2959728" இலிருந்து மீள்விக்கப்பட்டது