கைப்பேசி கலைச்சொல் அகராதி (நூல்)
கைப்பேசி கலைச்சொல் அகராதி (Dictionary of Mobile Technical Terms: English -Tamil) என்ற இந்நூல், கோ. பழனிராஜன், லெ. ராஜேஷ், மு. முகமது யூனுஸ், அகிலன் இராசரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூலுக்கு சென்னைப் பல்கலைக்கழக, தமிழ்ப் பேரகராதித் திருப்பணித் திட்ட முதன்மைப் பதிப்பாசிரியர் வ, ஜெயதேவன் ஆய்வுரையும், சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த் துறைத்தலைவர், ந. தெய்வ சுந்தரம், மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன இந்திய மொழிகள் தரவகத்திட்டத் தலைவர் எம். இராமமூர்த்தி மைசூர் தேசிய மொழிபெயர்ப்பு திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ச. இராதாகிருட்டிணன் அணிந்துரையும் வழங்கியுள்ளனர். நூலாசிரியர்கள் முன்னுரையில் நூல் குறித்த செய்திகளைப் பதிந்துள்ளார்.
நூலாசிரியர் | கோ. பழனிராஜன், லெ. ராஜேஷ், மு. முகமது யூனுஸ், அகிலன் இராசரெத்தினம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | அகராதி |
வெளியீட்டாளர் | ராஜகுணா பதிப்பகம், சென்னை |
வெளியிடப்பட்ட நாள் | திசம்பர் 2016 |
பக்கங்கள் | 162 |
ISBN | 9788193138007 |
நூலின் பகுதிகள்
தொகுஇந்நூல் கீழ்கண்டப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
- கைப்பேசி கலைச்சொற்கள்
- நிறுவனப் பெயர்கள்
- குறுஞ்செயலிப் பெயர்கள்
நூலின் சிறப்பு
தொகுதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் 31 வகைப்பாடுகளில் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர், பதிப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டு வெளியான நூல்களில் அகராதிப் பிரிவில் சிறந்த நூலாக இந்நூல் தேர்வு செய்யப்பட்டது.[1]