கைர்கோட்

ஆப்கானித்தானிலுள்ள ஒரு நகரம்

கைர்கோட் ( Khairkot ) சர்குன் சார் அல்லது சர்குன் சாகர்[1] or Katawaz[2] அல்லது கதாவாசு எனவும் அறியப்படும் இது, கிழக்கு ஆப்கானித்தானில் உள்ள பாக்டிகா மாகாணத்தின் கைர்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் மற்றும் நிர்வாகத் தலைநகருமாகும். இந்த நகரம் கில்ஜி பஷ்தூன்களின் சுலைமான்கேல் பழங்குடியினரின் மையப்பகுதிக்குள் அமைந்துள்ளது.[3]

கைர்கோட்
خیرکوټ
கதாவாசு, சர்குன் சாகர்
நகரம்
நாடு Afghanistan
மாகணம்பாக்டிகா மாகாணம்
மாவட்டம்கைர்கோட்
ஏற்றம்2,114 m (6,936 ft)
நேர வலயம்+ 4.30

1970 களில் கைர்கோட் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் நகரமாக இருந்தது. ஆனால் சோவியத் படையெடுப்பு மற்றும் ஆப்கானித்தானின் உள்நாட்டுப் போருக்குப் பிறகு இவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Zarghūn Shahr (Approved) , National Geospatial-Intelligence Agency
  2. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Katāwāz (Variant) , National Geospatial-Intelligence Agency
  3. Paktika Province Tribal Map (Page 11). Naval Postgraduate School.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைர்கோட்&oldid=3866304" இலிருந்து மீள்விக்கப்பட்டது