கைலாசநாதர் கோயில், உடையாளூர்

கைலாசநாதர் கோயில், உடையாளூரில் உள்ள சிவன் கோயிலாகும்.

கைலாசநாதர் கோயில் நுழைவாயில்

அமைவிடம் தொகு

இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி தொகு

கருவறையில் உள்ள மூலவர் கைலாசநாத சுவாமி ஆவார். இறைவி சங்கரபார்வதி அம்பாள் ஆவார்.

சிறப்பு தொகு

முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் மூலமாக இக்கோயில் போற்றப்பட்டு வந்ததை அறியமுடிகிறது. கருவறை வாயிலில் காணப்படுகின்ற துவாரபாலகர்களின் காலடியில் அடியார் சிற்பம் உள்ளது. மற்றொன்றில் அடியார் வணங்கும் கோலத்தில் உள்ள சிற்பம் உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இது போன்ற வடிவத்தைக் காணமுடியாது. [1] இக்கோயிலின் இணைக்கோயிலாகவும், உடையாளூரின் எல்லைக்காவல் தெய்வங்களாகவும் பால்குளத்தி அம்மன் கோயில், செல்வமகா காளியம்பாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. [2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் மூலவர் கருவறை, இறைவி கருவறை, முன்மண்டபம், பிரகாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நுழைவாயிலை அடுத்து உள்ளே வலது புறத்தில் மூலவர் கருவறை உள்ளது. கருவறை அமைந்துள்ள மண்டபத்திற்கு முன்பாக வலது புறத்தில் பால விநாயகர் சன்னதியும், இடது புறத்தில் பாலமுருகன் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், ராஜயோக அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, ரிஷபாரூடர், சூலினி துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் நிரிருதி விநாயகர், ஷண்முகர், சண்டிகேஸ்வரர், சிவபாதசேகர அனுக்கிரகமூர்த்தி, நவக்கிரகம், சனீஸ்வரர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. ஷண்முகர் சன்னதியை அடுத்துள்ள சன்னதியில் ஆனந்த கணபதி, அக்னி, சோமலிங்கம், வாயுலிங்கம், இந்திரலிங்கம், குபேரலிங்கம், அக்னிலிங்கம், ஈசானலிங்கம், வைத்தினாதலிங்கம், யமன்லிங்கம், கல்யாணசுந்தரர், நிருரிதிலிங்கம், சுந்தரேசுவரர், மீனாட்சி, வருணலிங்கம், சண்டிகேஸ்வரர், ஆசுர துர்க்கை, கஜலட்சுமி, சரஸ்வதி, ருத்ரலிங்கம், விஷ்ணுலிங்கம், பிரம்மலிங்கம் உள்ளிட்ட பல சிற்பஙகள் உள்ளன. திருச்சுற்றில் குரு பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ணா பைரவர், வடுக பைரவர், சண்ட பைரவர் எனப்படுகின்ற பஞ்ச பைரவர்கள் உள்ளனர்.

சதய விழா தொகு

இராஜராஜ சோழனின் பிறந்த சதய நாளில் இங்கு வருடம்தோறும் சதய விழா. மிக சிறப்பாக ஊர் மக்கள் ஒன்றுகூடி புலி கொடி ஏற்றி சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு செய்துவருகின்றனர் . [3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

படத்தொகுப்பு தொகு