கைவினை பொக்கிசம் விருது

கைவினை பொக்கிசம் விருது (Kaivinai Pokkisham Award)(வாழும் பொக்கிச கைவினைஞர்) என்பது ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் சிறந்த மூத்த கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் இந்திய விருது ஆகும்.

இந்த விருது, பஞ்சலோக சிலைகள், வெண்கல விளக்குகள் மற்றும் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் தட்டுகள், கல் சிற்பங்கள், கலம்காரி மற்றும் பட்டிக் ஓவியங்கள், காகித மச்சி பொம்மைகள், பாய் நெசவு, மூங்கில் மற்றும் பனை பொருட்கள் செய்யும் கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

65 வயதுக்கு மேற்பட்ட பத்து கைவினைஞர்கள் ஒரு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த விருது ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Poompuhar Artisans Get Top Award". New Indian Express. 1 September 2014 இம் மூலத்தில் இருந்து 5 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140905023628/http://www.newindianexpress.com/states/tamil_nadu/Poompuhar-Artisans-Get-Top-Award/2014/09/01/article2408879.ece. பார்த்த நாள்: 3 September 2014. 
  2. "TN govt's fillip to artisans". newstodaynet.com இம் மூலத்தில் இருந்து 4 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140904064949/http://newstodaynet.com/chennai/tn-govts-fillip-artisans. பார்த்த நாள்: 3 September 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவினை_பொக்கிசம்_விருது&oldid=4108713" இலிருந்து மீள்விக்கப்பட்டது