கொக்கோவா
பச்சை கொக்கோவா (கொக்கோவா விரிடிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கொக்கோவா

கோட்ஜ்சன், 1836
சிற்றினம்

கொக்கோவா பர்புரேயா
கொக்கோவா விரிடிசு
கொக்கோவா பெக்காரி
கொக்கோவா அசுரியா

கொக்கோவா (Cochoa)(கோசோ (cocho) நேபாளிமொழியிலிருந்து) என்பது நடுத்தர அளவிலான பூச்சி மற்றும் மெல்லுடலிகளை உண்ணும் பறவைகள் ஆகும். இவை பிரகாசமான மாறுபட்ட இறகுகளுடன் பாலின வேறுபாட்டுடன் காணப்படும். ஆரம்பக் காலத்தின் இவற்றின் உணவுப் பழக்கத்துடன் கூடிய வாழிட சூழலால் இவற்றின் நிலையைக் கண்டறிவது கடினமாக இருந்தது. ரிச்சர்ட் பவுட்லர் சார்ப் 1879-ல் அவற்றை பிரியோனோபி குடும்பத்தில் வகைப்படுத்தினார்.[1] இந்த பேரினம் முன்பு பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேவில் சேர்க்கப்பட்டது. ஆனால் மூலக்கூறு இன உறவு ஆய்வுகள் இதனை அமெரிக்கப் பாடும் பறவை குடும்பமான துர்டிடேவுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது என்பதைக் காட்டியது.[2][3][4]

சிற்றினங்கள்

தொகு

கொக்கோவா தென்கிழக்கு ஆசியக் காடுகளில் வாழும் பறவைச் சிற்றினங்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இவை தண்ணீருக்கு அருகில் காணப்படுகின்றன. இந்தப் பேரினமானது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[5]

படம் பொதுப் பெயர் விலங்கியல் பெயர் பரவல்
  ஊதா கோச்சோவா கொக்கோவா பர்பூரியா வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம்
  பச்சை கொக்கோவா கொக்கோவா விரிடிஸ் கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பூட்டான்.
  சுமத்ரா கொக்கோவா கொக்கோவா பெக்காரி இந்தோனேசியா.
ஜாவான் கொக்கோவா கொக்கோவா அசுரியா இந்தோனேசியா.
 
 

மேற்கோள்கள்

தொகு
  1. Ripley SD (1952). "The thrushes". Postilla 13: 1–48. https://archive.org/stream/postilla150peab#page/n116/mode/1up. 
  2. Voelker, G.; Spellman, G.M. (2004). "Nuclear and mitochondrial evidence of polyphyly in the avian superfamily Musicapoidea". Molecular Phylogenetics and Evolution 30 (2): 386–394. doi:10.1016/S1055-7903(03)00191-X. பப்மெட்:14715230. 
  3. Klicka, J.; Voelker, G.; Spellman, G.M. (2005). "A molecular phylogenetic analysis of the "true thrushes" (Aves: Turdinae)". Molecular Phylogenetics and Evolution 34 (3): 486–500. doi:10.1016/j.ympev.2004.10.001. பப்மெட்:15683924. 
  4. Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044. http://www.nrm.se/download/18.3ebfe5cf12a9d3ebacb80002787/Sangster+et+al+2010+Muscicapidae+MPE.pdf. பார்த்த நாள்: 2010-10-12. 
  5. Gill, Frank; Donsker, David, eds. (2016). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கோவா&oldid=3740567" இலிருந்து மீள்விக்கப்பட்டது