கொங்கர்புளியங்குளம்
கொங்கர்புளியங்குளம் அல்லது கே. புளியங்குளம் (Kongar Puliyankulam), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கே. புளியன்குளம் ஊராட்சியில் பழம்பெரும் சின்னங்கள் அமைந்த கிராமம் ஆகும். இங்கு கொங்கர்புளியங்குளம் சமணர் மலையில் சமணர் படுக்கைகளும், கிமு 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுக்களும் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுக்களும் உள்ளது.[1]
அமைவிடம்
தொகுமதுரை - உசிலம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே 2 கிமீ தொலைவிலும், மதுரைக்கு மேற்கில் 15 கிமீ தொலைவில், நாகமலை அடிவாரத்தில் கொங்கர்புளியங்குளம் கிராமம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொங்கர்புளியங்குளம் கிராமம் 1,091 குடும்பங்களும், 3,815 மக்கள்தொகையும் கொண்டது. எழுத்தறிவு 75.98% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 885 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில், தாழ்த்தப்பட்டோர் 9.9% ஆகவுள்ளனர். [2]