கொடை ரோடு
கொடை சாலை (Kodai Road) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல்லிருந்து, மதுரை செல்லும் வழியில் 25 கி மீ தூரத்தில், அம்மைநாயக்கனூர் பேரூராட்சி அருகே கொடை சாலை அமைந்துள்ளது.[1][2] இங்குதான் கொடைக்கானல் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கொடைக்கானல் செல்வதற்கு சாலைப் பிரிவு உள்ளதால் கொடைக்கானல் சாலை என்று அழைக்கப்பட்டது. பின்னர் இப்பெயர் மறுவி கொடை சாலை என்று ஆனது. இந்தியாவில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களின் பட்டியலில் கொடை சாலையும் அடங்கும். கொடை சாலை சுற்றுலாவில் பல்வேறு உள்ளூர், மற்றும் பார்வையிடும் வரலாற்று இடங்களைக் காணலாம்.
கொடைக்கானலுக்கு பிற ஊர்களில் இருந்து தொடருந்துகள் மூலம் வருபவர்கள், கொடை சாலையில் இறங்கி பேருந்து மற்றும் பிற வாகனங்கள் மூலம் கொடைக்கானலுக்குச் செல்வர். அனைத்து தொடர் வண்டிகளுக்கும் இங்கு நிறுத்தம் உள்ளது. கொடைக்கானலில் கிடைக்கக் கூடிய வணிக வளங்களை வணிகத்திற்கு கொண்டு செல்ல இவ்வூரை ஒரு வழியாக வணிகர்கள் பயன்படுத்தினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கொடை ரோடு பகுதியில் திராட்சை விளைச்சல் அமோகம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2017/mar/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2665394.html. பார்த்த நாள்: 21 May 2023.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.