கொட்டியாரக் கோட்டை

கொட்டியாரக் கோட்டை (Koddiyar fort) என்பது இலங்கையில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டைகளுள் ஒன்றாகும். இதுவே ஒல்லாந்தரால் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது கோட்டை ஆகும்.[1][2] இது கொட்டியாரக்குடாவின் தெற்குப் பகுதியில் 1622 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. போர்த்துகேயரை இலங்கையிலிருந்து முற்றாக விரட்டுவதற்காக ஒல்லாந்தருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக கண்டி மன்னன் செனரத் முதூர் எனும் இடத்தில் கோட்டை ஒன்றை அமைப்பதற்கு அனுமதி பெற்றிருந்தான். எனினும் அவனால் கட்டப்பட்டுக்கொண்டிருந்த இக்கோட்டையானது போர்த்துகேயரால் அரைவாசியிலேயே இடிக்கப்பட்டது. பின்னர் போர்த்துக்கேயர் ஒல்லாந்தரால் தோற்கடிக்கப்பட்டதும் மீண்டும் கொட்டியாரக் கோட்டை 1658 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட்டது.[3]

கொட்டியாரக் கோட்டை
பகுதி: திருக்கோணமலை
மூதூர், இலங்கை
கொட்டியாரக் கோட்டை is located in இலங்கை
கொட்டியாரக் கோட்டை
கொட்டியாரக் கோட்டை
ஆள்கூறுகள் 8°27′45″N 81°15′39″E / 8.462363°N 81.260955°E / 8.462363; 81.260955
வகை தடுப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை இடிக்கப்பட்டது
இட வரலாறு
கட்டிய காலம் 1622
கட்டியவர் ஒல்லாந்தர்
சண்டைகள்/போர்கள் சிலசமயங்களில்

மேற்கோள்கள்

தொகு
  1. Nelson, William A.; De Silva, Rajpal Kumar (1984). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. Edinburgh: Canongate. p. 117.
  2. "Koddiyar Fort". AmazingLanka.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
  3. "King Rajasinghe plans to oust Portuguese invaders". Sunday Observer. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டியாரக்_கோட்டை&oldid=3551572" இலிருந்து மீள்விக்கப்பட்டது