கொணவக்கரை பாறை ஓவியங்கள்

கொணவக்கரை பாறை ஓவியங்கள், நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரிக்கு அண்மையில் உள்ள கொணவக்கரை என்னும் ஊரின் மலைப்பகுதியில் காணப்படும் பழைய காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் ஆகும். இங்கு விலங்கு உருவங்களும், மனித உருவங்களும் காணப்படுகின்றன.[1]

ஓவியங்கள்

தொகு

இங்குள்ள ஓவியங்கள் வெள்ளை நிறங்கொண்டு வரையப்பட்டவை. பெரும்பாலும், கோட்டுருவங்களாக அல்லாமல், நிறம் நிரப்பு முறையில் வரையப்பட்டனவாகத் தோற்றுகின்றன.[2] இவை தடிப்பான தூரிகைகளைக் கொண்டு வரையப்பட்டிருக்கக்கூடும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3] இங்குள்ள ஒரு ஓவியத்தில் பெரிய மனித உருவம் ஒன்றின் முன் சிறிய வில்லேந்திய மனிதர்கள் காணப்படுகின்றனர். இது ஒரு மந்திரச் சடங்கு நிகழ்வைக் குறிப்பதாக இருக்கலாம் என இராசு பவுன்துரை கருதுகிறார்.[4] வில்லேந்திய மனிதர்களைக் கொண்ட ஓவியம் ஒரு போர்க் காட்சியைக் குறிப்பதாக இருக்கலாம் என்பது வேறு சில ஆய்வாளர்களின் கருத்து.[5]

பசுவும் கன்றும், ஆடு, குதிரை போன்ற விலங்குகள் இங்குள்ள ஓவியங்களில் காணப்படுகின்றன. குதிரையில் மனித உருவம் அமர்ந்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 103 - 108.
  2. பவுன்துரை, இராசு., 2001, பக். 103.
  3. Dayalan, D.
  4. பவுன்துரை, இராசு., 2001, பக். 104.
  5. Dayalan, D.

உசாத்துணைகள்

தொகு
  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்

தொகு