கொண்டை ஊசி (Hairpin) என்பது அலங்கரிப்பட்ட சிகை அலங்காரத்தை கலையாமல் ஒழுங்காக வைத்திருக்கப் பயன்படும் சிறிய நீண்ட கருவியாகும். உலோகம், தந்தம், வெண்கலம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள் பண்டைய அசிரியா, எகிப்து போன்ற இடங்களில் பயன்பட்டுள்ளன. பண்டைய கிரேக்கர்கள், எகிப்தியர்கள், ரோமானியர்கள் கொண்டை ஊசியை ஆடம்பரப் பொருட்களாகவும் பாவித்துள்ளனர்.

ஒருவகைக் கொண்டை ஊசி
கி.மு. 600 அளவில் கொண்டை ஊசிகள்

1901 ல் நியூசிலாந்தை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் எர்னஸ்ட் கோட்வர்ட் வளைவுகளுடன் கூடிய கொண்டை ஊசியை வடிவமைப்பதில் வெற்றிகண்டார். கொண்டை ஊசிக்கான காப்புரிமையை 1925 ம் ஆண்டில் கெல்லி சம்மாண்டி என்பவர் பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. CA patent 250155, "Hairpin", issued 02-06-1925  See also "Hairpin". Canadian Patents Database. Canadian Intellectual Property Office. 25-01-2012. Archived from the original on 2007-12-12. பார்க்கப்பட்ட நாள் 27-01-2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_ஊசி&oldid=3929279" இலிருந்து மீள்விக்கப்பட்டது