கொம்பாவிளை
கொம்பாவிளை (Kombavilai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அகசுதீசுவரம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். [1]நெல் வயல்களாலும், தென்னந் தோப்புகளாலும், தனிமம் செறிவூட்டப்பட்ட அரபிக்கடலாலும் கிராமம் சூழப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் இதமான காலநிலை, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை, போன்றவை இக்கிராமத்தின் சிறப்புகளாகும். ஏறக்குறைய இருநூறு பேர் இங்கு வசிக்கின்றனர். கொம்பவிளையில் சராசரி கல்வியறிவு 90% ஆகும். தேசிய சராசரியான 59.5% என்பதை விட இது மிக அதிகம்: ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 89%.
கொம்பாவிளை | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி குறியீடு | 04652 - 258 xxx |
புவியியல்
தொகுகன்னியாகுமரியில் இருந்து மேற்கு கடற்கரை சாலையில் 5 கிமீ தொலைவிலும், நாகர்கோவில் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்திலும் கொம்பாவிளை அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ahmad, Naqeeb. "PIN Code of Kombavilai Kanyakumari District in State of Tamil Nadu". Online India Code (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-05-21.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)