கொய்யாப் பழம்

(கொய்யாப் பழத்தின் பயன்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொய்யாப் பழம் (Guavas) என்பது வெப்ப வலயங்களிலும் துணை வெப்ப வலயங்களிலும் பயிரிடப்படும் பழமாகும்.

பழுத்த (கொய்யாப் பழம்)

கொய்யா என பொதுவாக அறியப்படும் மரம் என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும் கொய்யா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமாகும். இக்குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் கொய்யா என்றே அழைக்கப்படுகின்றன. ஆனாலும் அவை மற்றைய இனங்களைச் சேர்ந்தவையாகும்.

கொய்யாப்பழம் ஒருவித நறுமணத்தைக் கொண்டிருக்கும். இப்பழத்தில் பலவகைகள் உள்ளன. ஒரு வகைப் பழம் பம்பரம் போலிருக்கும் மற்றொரு வகை உருண்டை வடிவத்தில் இருக்கும். ஒரு வகை பழத்தின் உள் பகுதி வெண்மையாக இருக்கும். இன்னொரு வகைப் பழத்தின் உள்பகுதி ரோஜ்ப் பூ நிறத்தில் இருக்கும்.

கொய்யாப் பழத்திற்கு பருவகாலம் உண்டு. சில குறிப்பிட்ட காலத்தில்தான் விளைகின்றது. இன்றும் பல வீடுகளில் கொய்யா மரங்கள் உள்ளன. இப்பழத்தில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, எரியம், மாவுசத்து, தாதுச்சத்து, புரதம், கொழுப்பு போன்ற பல சத்துக்கள் உள்ளன.

இப்பழத்தில் அதிகமாக வைட்டமின் ‘சி’ உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கும், பற்கள் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிக முக்கியமான சத்தாக வைட்டமின் ‘சி’ இருப்பது சிறப்பாகும்.

சிறியவர்கள் இப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது உடல் வளர்ச்சிக்கு உதவும். பெற்றோர்களும் இப்பழம் கிடைக்கும் காலத்தில் பிள்ளைகளுக்கு அடிக்கடி வாங்கித் தருவது நல்லது.

உற்பத்தி

தொகு

அதிகளவில் கொய்யா உற்பத்தி செய்யும் எட்டு நாடுகள்

 
'தாய் மரூன்' கொய்யா
பெரும் கொய்யா
உற்பத்தியாளர்கள்—2012

(மெ. தொன்)[1]
  இந்தியா 15,250,000
  சீனா 4,400,000
  கென்யா 2,781,706
  தாய்லாந்து 2,650,000
  இந்தோனேசியா 2,376,339
  பாக்கித்தான் 1,950,000
  மெக்சிக்கோ 1,760,588
  பிரேசில் 1,175,735
உலகம் 42,139,837

உசாத்துணை

தொகு
  1. "World production in 2012 of mangoes, mangosteens and guavas". Food and Agricultural Organization of the United Nations. 2014. பார்க்கப்பட்ட நாள் 23 January 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்யாப்_பழம்&oldid=4178881" இலிருந்து மீள்விக்கப்பட்டது