கொரிய இசை (Korean music) மரபு கொரிய மக்களின் நாட்டுப்புற, வாய்மொழி, சமய, அரசு நாளோலக்க, சடங்கு ஆகிய இசை வடிவங்களை உள்ளடக்கும். கொரிய இசை, கொரியக் கலைகள், வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் அனைத்துமே வரலாற்றுக்கு முந்தைய காளத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளன.[1]

சீயோலில் மரபிசை அணிவகுப்புl.

கொரியாவில் இன்று இருவகை இசைப் பண்பாடுகள் நிலவுகின்றன. அவை குகாக் (Gugak) எனும் மரபிசையும் யாங்காக் (yangak)எனும் மேலையிசையும் ஆகும்.

வரலாறு தொகு

முதல் மூன்று கொரிய அரசுகள் தொகு

கொரியாவின் முதல் மூன்று அரசுகள் கால மரபிசையைப் பற்ரி சரியான தகவலேதும் கிடைக்கவில்லை. எனினும் சீன வரலாறு புயியோ, கோகுர்யியோ, தோங்யே அரசு மக்கள் அறுவடை விழாக்களில் தேறல் மாந்தி நடனமாடியதைப் பதிவு செய்துள்ளது. கொரிய இனக்குழு அரசுகளின் மக்கள் பலநாட்கள்வரை அறுவடை விழாவின்போது வேளாண்மைச் சடங்காக, வானகம் நோக்கிக் குடித்துவிட்டு நடனமாடியதை சீனப் பனுவல்கள் விவரிக்கின்றன.[2]

சம்கான் இசை தொகு

சென் ழ்சூ (233-297) எழுதிய மூன்று அரசுகளின் பதிவுகள் எனும் வரலாற்று நூலில் கொரியவின் மிகப்பழைய இசைப்பதிவுகள் கிடைக்கின்றன.இது மகான் கூட்டுக்குழு மக்கள் மேவிலும் அக்டோபரிலும் இடைவிடாமல் அறுவடை விழாவில் சில நாட்கள் நடனமாடி சடங்குகள் செய்வதைக் கூறுகிறது. மேலும் யோசியோன் பேரரசின் மாமன்னர் சீயோங் கால ஆவணங்கள் சஙான் இசைவடிவம் (Samhan) தனிப்பாணிஉடையது எனவும் அவ்விசை இசைக்கருவிகள் ஏதுமின்றி நிகழ்த்தப்பட்டது எனவும் கூறுகின்றன.[3]

கொரியாவின் முப்பெரும் அரசுகள் தொகு

கோகுரியியோ தொகு

கோகுர்யியோ கால இசை வரலாற்றை முப்பகுதியாகப் பிரிக்கலாம்.முதலாவது, வெளிதாக்கத்துக்கு முன்காலம். இது கியோமுங்கோஎனும் மரபிசைக் கருவியைக் கண்டுபிடித்த்தும் தோன்றியது. .;[4] இரண்டாவது 4 ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் கோகுர்யியோ வடக்கு வீ அரசுடன் தொடர்பு கொண்டபோது உருவாகியது; இறுதிக்கட்டம் 6 ஆம்நூற்றாண்டில் தொடங்கி இவ்வரசின் வீழ்ச்சிக் கட்டம்வரை இருந்தது.

இராக்குயில்களின் பாடல் (en அங்குல் எழுத்துமுறை: 황조가) தொடக்க்க் கால கோகுர்யியோ இசையமைந்த படலாகும். இது கோகுரியியோ அரசர் யூரியால் பாடப்பட்டது. இந்தப் பாடல் அவர் காதலித்த காதலியைப் பற்றிக் கூறுகிறது.[5]

வாங் சனக்(en hangul:왕산악)எனும் இசைக்கலைஞர் கியோமுங்கோ இசையை உருவாக்கினார். இதன் சீனவடிவத்தில் இருந்து இதைப் புதுமையாகப் படைத்தார்.[6] The mural tomb of Anak dated to 4th century describes the players of geomungo.[6]

பயேக்யே தொகு

இதுவரை தொடர்ந்துவரும் ஒரே பயேக்யே இசைவடிவம் இயோங்கியுப்சா(en hangul: 정읍사) ஆகும் ஆனால் இதைப் பற்றிக் கோகுரியியோ கல்லறைகளில் குறிக்கத்தக்க பதிவு கிடைக்காத்தால் இது எப்படி இசைக்கப்படும் என்பதே தெரியாது. ஆனால் இதுவும் கோகுரியியோ போலவே அறுவடைத் திருவழாவில் மே, அக்டோபர் மாதங்களில் பாடப்பட்டதே ஆகும்.[7]

இந்த இசைவடிவம் தெற்கு சாங் அரசிலும் வடக்கு வீ அரசிலும் அறியப்பட்டிருந்த்து. பயேக்யே இசைக்கலைஞர்களை யாப்பான் அழைத்துள்ளது.[8] குறிப்பாக, பயேக்யேவும் மீமாயியும் (en hangul: 미마지) முகமூடி நடனமும் சீனாவில் கற்ற ஒருவர் கி.பி 612 இல் யப்பானுக்குப் புலம்பெயர்ந்துள்ளார்.[9][10] யப்பனியப் பேரரசர் அகிகிதோ 2001இல் பயேக்யே யப்பானிய அரசவை இசையின் வேராகும் என்றார். ஏனெனில் பேரரசர் கண்மூ (r.871-896) என்பவரே பயேக்யே அரசர் மூரியியோங்கின் (r.501-523) கால்வழியில் வந்தவர்.[8]

மரபிசைக்கருவிகள் தொகு

 
மணிகளும் குழல்களும்.

மரபிசைக்கருவிகள் கீழ்வருமாறு மூவகைப்படும்:

1)நரம்பு அல்லது நாண்வகை 2)காற்றுவகை 3)தட்டல்வகை

கயாகியும் (12-நாண் யாழ்), கியோமுங்கோ (அறுநாண் யாழ்) ஆகியன நரம்பிசைக் கருவிகளாகும். The haegum (two-string vertical fiddle) and the ajaeng (seven-string zither) are part of the string T'ang. Court string music also included use of the seven-string zither and the 25-string zither.

தேகியும் (நீளமான குறுக்குத்துளைக் குழல்), பிரி உருளை வடிவக் குழல்), புல்லாங்குழல் ஆகியன குழலிசைக் கருவிகள் ஆகும். சீனக்குழலும் குத்துக் குழலும்ஓயோக் அல்லது தேபியோங்சோ இணைந்த கூட்டுக் காற்றிசைக் கருவி தாங்கு எனப்படுகிறது. [[சயேங்குவாங் எனும் நாதசுரம்(mouth organ), பல்குழலிகள், கன்-கன் எனும் ஒகாரினா (ocarina), ஊதல் இணைந்த குழல், தான்சோ எனும் (சிறுதுளை குத்துக்குழல்), புல்லாங்குழல் ஆகியன அரசவைக் கருவிகள் ஆகும்.

நாட்டுப்புறத் தட்டல் இசைக் கருவிகளாவன: யிங் (நீண்ட தொங்கல் கோங்கு), குவேங்குவாரி (கையில் பிடி கோங்கு), புக் ( (மத்தளம்), யாங்கு (நாழிகைவட்டில் மத்தளம், பாக் (தப்பட்டை) ஆகிய மக்கள் தட்டல் இசைக் கருவிகள்; அரசவைத் தட்டல் இசைக் கருவிகளாவன: pyeongjong (வெண்கல மணிகள்), pyeongyeong (கல் குழல்),சக் (சதுர மரப்பெட்டியும் சுத்தியும்), இயோ (சிறுத்தையுருத் துருவி).

நிகழ்கால இசை தொகு

கொரியாவின் நிகழ்கால இசை வளமாக முனைப்போடு நிகழ்த்தப்படுகிறது. இது பல்வேறு பணிகளைக் கொண்டுள்ளது. கொரியாவில் உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் வாழ்கின்றனர்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.everyculture.com/East-Southeast-Asia/Korean-Religion-and-Expressive-Culture.html
  2. Don Michael Randel, 《The Harvard Dictionary of Music》, Harvard University Press, 2003. ISBN 0674011635 p.273
  3. Royal Asiatic Society, 〈Transactions of the Korea Branch of the Royal Asiatic Society〉, Vol.48-51, p.27
  4. 《三國史記》 〈雜紙〉 1
  5. Kim, Hung-gyu. "Understanding Korean Literature". பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  6. 6.0 6.1 Howard, Keith. "Perspectives on Korean Music, 1권". Ashgate Publishing, Ltd. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  7. Yoon, seoseok. "Festive Occasions: The Customs in Korea". Google E-books. Ewha Womans University Press. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09. {{cite web}}: line feed character in |title= at position 35 (help)
  8. 8.0 8.1 Tudor, Daniel. "Korea: The Impossible Country". Google ebooks. Tuttle Publishing. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  9. Pratt, Keith. "Everlasting Flower: A History of Korea". Reaktion Books. {{cite web}}: |access-date= requires |url= (help); Missing or empty |url= (help)
  10. Harich-Schneider, Eta (1954). "The rhythmical Patterns in gagaku and bugaku. [Mit Illustr. u. Notenbeisp.]". Ethno-Musicologica (Netherlands) 3: 10. 
  • Provine, Rob, Okon Hwang, and Andy Kershaw (2000). "Our Life Is Precisely a Song". In Broughton, Simon and Ellingham, Mark with McConnachie, James and Duane, Orla (Ed.), World Music, Vol. 2: Latin & North America, Caribbean, India, Asia and Pacific, pp 160–169. Rough Guides Ltd, Penguin Books. ISBN 1-85828-636-0.
  • Korean Cultural Insights. "Traditional Arts". Republic of Korea. p 27. Korea Tourism Organization, 2007.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிய_இசை&oldid=3366532" இலிருந்து மீள்விக்கப்பட்டது