கொலுசு பெதா ரெட்டையா

இந்திய அரசியல்வாதி

கொலுசு பெதா ரெட்டையா (Kolusu Peda Reddaiah) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கொலுசு பேடா ரெட்டையா என்ற பெயராலும் அறியப்படுகிறார். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று இத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 10 ஆவது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.[3][4] 1983-1985 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், மீண்டும் 1985-89 முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் பணியாற்றினார்.[5] கடைசியாக இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் ஏலூரு மக்களவைத் தொகுதி பிரச்சா இராச்சியம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[6] 2023 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.

கொலுசு பெதா ரெட்டையா
Kolusu Pedda Reddaiah
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னையவர்காவுரி சாம்பசிவ ராவ்
பின்னவர்கைகலா சத்தியநாராயணா
தொகுதி மச்சிலிப்பட்டினம்[1]
ஆந்திரப்பிரதேச ஆந்திரப்பிரதேசம்
பதவியில்
1983–1985
முன்னையவர்வத்தே சோபநாத்ரீசுவர ராவ்
பின்னவர்அன்னி பாபு ராவ்
தொகுதிஉய்யுரு[2]
(தொகுதி வரையறுக்கப்பட்டது, 2008)

குடும்பம்.

தொகு

இவரது மகன் கொலுசு பார்த்தசாரதி நுசுவிட்டு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார்.[7]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலுசு_பெதா_ரெட்டையா&oldid=4089022" இலிருந்து மீள்விக்கப்பட்டது