காவுரி சாம்பசிவ ராவ்
காவுரி சாம்பசிவ ராவ் (Kavuri Samba Siva Rao) (பிறப்பு 1 அக்டோபர் 1943) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், பொறியாளரும், தொழிலதிபரும் ஆவார். [1] இவர் 17 ஜூன் 2013 முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில், ஜவுளி அமைச்சகத்தில் ஜவுளி அமைச்சராக இருந்தார். [2]
காவுரி சாம்பசிவ ராவ் | |
---|---|
காவுரி சாம்பசிவ ராவ் | |
ஜவுளி அமைச்சகம் | |
பதவியில் 17 ஜூன் 2013 – 26 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | ஆனந்த் சர்மா |
பின்னவர் | சந்தோஷ் குமார் கங்க்வார் |
தொகுதி | ஏலூரு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1943 ஏலூரு, ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (until 2014) |
துணைவர் | ஹேமலதா |
பிள்ளைகள் | 1 மகன், 3 மகள்கள் |
வாழிடம் | ஏலூரு |
கல்வி | தேசிய தொழில்நுட்பக் கல்லூரி, வாரங்கல் |
As of 16 September, 2006 மூலம்: [1] |
2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்படுவதை எதிர்த்து இவர் தனது அமைச்சர் பதவியையும், காங்கிரசு கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்தார் [3]
தொழில்
தொகுஇவர் இந்தியாவின் 8வது, 9வது, 12வது, 14வது மற்றும் 15வது மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார், [4] இவர் 1 மே 2014 இல் அக்கட்சியில்வ்இணைந்தார்.
முன்னதாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டிணம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர், கட்டுமானம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறைகளில் வணிகத் தொழிலதிபர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்துக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஜூன் 17, 2013 அன்று ஜவுளித் துறைக்கான மத்திய அமைச்சராகப் பதவியேற்றார் [5]
28 ஏப்ரல் 2014 அன்று இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்து பாரதிய ஜனதா கட்சியில் சேரும் முடிவை அறிவித்தார். தெலங்காணா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரு மாதத்திற்கு முன், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதில்லை என்றும் இவர் அறிவித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "K.S. Rao, an engineer, industrialist serving fifth term as MP (Profile)". Business Standard. 2013.
- ↑ "Who's Who: Minister". Ministry of Textiles. பார்க்கப்பட்ட நாள் 16 September 2013.
- ↑ "Sambasiva Rao resigns protesting division of Andhra Pradesh". தி எகனாமிக் டைம்ஸ். 2014.
- ↑ Kalavalapalli, Yogendra (2 May 2014). "Congress minister Kavuri Samba Siva Rao joins BJP". Mint. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
- ↑ "Profile". Indian Parliament. Archived from the original on 2007-10-17. பார்க்கப்பட்ட நாள் 2023-11-09.