கொல்லங்கொண்டான் (பாண்டிய அரசன்)

பாண்டிய அரசன்

கொல்லங்கொண்டான் தென்காசிப் பாண்டியர்கள் அரசில் ஒருவர். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் 'கொல்லங்கொண்ட பாண்டியன்' என அழைக்கப்பட்டான். வரகுணராம பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்த கொல்லங்கொண்டான் பின் தென்காசி பாண்டியர் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.