கொழுஞ்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொழுஞ்சி | |
---|---|
![]() | |
var. purpurea | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
சிற்றினம்: | Millettieae |
பேரினம்: | Tephrosia |
இனம்: | T. purpurea |
இருசொற் பெயரீடு | |
Tephrosia purpurea (L.) Pers. |
கொழுஞ்சிச் (Wild indigo) செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.
இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு தூறல்களைக் கொண்டே இது நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும். இது இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாக காணப்படுகிறது.
இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.[சான்று தேவை]