கொழுப்பு வளியியம்
கொழுப்பு வளியியம் அல்லது கொழுப்புப் போலி வளியியம் (Lipid pneumonia or lipoid pneumonia ) என்பது ஒரு குறிப்பிட்ட வடிவமான நுரையீரல் வீக்க நோயாகும். மூச்சுக்குழாய் கிளைகளில் கொழுப்பு புகுவதால் இந்நோய் தோன்றுகிறது. நோய்க்குக் காரணியாக இங்கு கொழுப்பு இருப்பதால் இந்நோய் சில சமயங்களில் கொழுப்பிணி வளியியம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]
கொழுப்பு வளியியம் Lipid pneumonia | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | pulmonology |
ஐ.சி.டி.-9 | 516.8 |
ம.இ.மெ.ம | 215030 |
ம.பா.த | D011017 |
வரலாறு
தொகுசிறு எண்ணெய்த் துளிகளை உள்ளீழுக்கிழுத்த பச்சிளம் குழந்தைகளிடம் கொழுப்பு வளியியம் இருப்பதை இலாஃப்லென் 1925 ஆம் ஆண்டில் முதன்முதலாக விவரித்தார்[2]. அரிதாக நிகழும் இத்தகைய நிகழ்வுகளுக்காக மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைகள் தொழிலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய சிகிச்சையாக மாறிப்போகலாம். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் அரிதாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[2]
காரணங்கள்
தொகுஇத்தகைய கொழுப்புப் பொருட்களுக்கு புறக்காரணி அல்லது அகக்காரணி இவற்றிலொன்று ஆதாரமாக இருக்கமுடியும்.[3] === புறக்காரணி===:
உடலுக்கு வெளியே இருந்து, உதாரணமாக, உள்ளிழுக்கப்படும் எண்ணெய் அடிப்படை,யிலான மூக்குச் சொட்டு மருந்துகள், தற்செயலாக உள்ளிழுக்கப்படும் ஒப்பனை எண்ணெய்ச் சொட்டுகள் ஆகியன புறக்காரணிகளாகும். அமியோடெரான் எனப்படும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பை கட்டுப்படுத்துவதாகக் கருதப்படும் சொட்டு மருந்தும் ஒரு காரணமாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.[4]
=== அகக்காரணி===:
உடலுக்குள் இருந்தே தோன்றுவன இவ்வகையில் அடங்கும். உதாரணமாக, மூச்சுக்குழலில் காற்றின் பாதை தடையேற்பட்டால் இத்தைடைக்குத் தொலைவில் இரத்த விழுங்கணுக்கள் மற்றும் மிகப்பெரிய உயிரணுக்கள் மூச்சுக்குழலின் துண்டிக்கப்பட்ட காற்று இடைவெளியில் நிரம்பி விடுகின்றன[5].
தோற்றம்
தொகுஒரு கொழுப்பு வளியியத்தின் ஒட்டு மொத்த தோற்றம் தெளிவற்றதாக உள்ளது, நுரையீரலின் மேற்பகுதி வெளிர் மஞ்சள் பகுதியாக உள்ளது. இந்த மஞ்சள் தோற்றத்தை நாட்டுப்புற வழக்கிலுள்ள சொல்லான "தங்க" நிமோனியா என்ற சொல்லால விளக்குகிறார்கள்.
நுண்ணோக்கி அளவீடுகளில் நுரைபோன்ற இரத்த விழுங்கணுக்கள் மற்றும் மிகப்பெரிய உயிரணுக்கள் காற்றுப் பாதையில் காணப்பட்டன. அழற்சியின் விளைவுகளும் பாரங்கைமாவில் காணப்பட்டன.
சிகிச்சை
தொகுபுரணித்திரலனையம் மற்றும் சிரை வழியாக நோய் எதிர்ப்புப் புரதங்கள் செலுத்துதல் ஆகியனவே இதற்கான சிகிச்சை முறைகளாகும்.
முன்னறிதல்
தொகுஅகக்காரணி கொழுப்பு வளியியம் மற்றும் குறிப்பிடப்படாத இடைத்திசு நுரையீரல் அழற்சி ஆகியவை ஒரு குழந்தை நுரையீரலின் முழுமையான வளர்ச்சிக்கு முன்பே காணப்படுகின்றன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pelz L, Hobusch D, Erfurth F, Richter K (1972). "[Familial cholesterol pneumonia]". Helv Paediatr Acta 27 (4): 371–9. பப்மெட்:4644274.
- ↑ 2.0 2.1 Kizer KW, Golden JA (November 1987). "Lipoid pneumonitis in a commercial abalone diver". Undersea Biomedical Research 14 (6): 545–52. பப்மெட்:3686744. http://archive.rubicon-foundation.org/2451. பார்த்த நாள்: 2013-04-02.
- ↑ "Pulmonary Pathology". பார்க்கப்பட்ட நாள் 21 November 2008.
- ↑ Kim JY, Jung JW, Choi JC, Shin JW, Park IW, Choi BW (February 2014). "Recurrent lipoid pneumonia associated with oil pulling". The International Journal of Tuberculosis and Lung Disease 18 (2): 251–2. doi:10.5588/ijtld.13.0852. பப்மெட்:24429325.
- ↑ 5.0 5.1 "Endogenous lipoid pneumonia preceding diagnosis of pulmonary alveolar proteinosis". Clin Respir J. 2014. doi:10.1111/crj.12197. பப்மெட்:25103284.
உசாத்துணை
தொகு- Spickard, Anderson; Hirschmann, JV (Mar 28, 1994). "Exogenous Lipoid Pneumonia". Archives of Internal Medicine 154 (6): 686–92. doi:10.1001/archinte.1994.00420060122013. பப்மெட்:8129503.
- Betancourt, SL; Martinez-Jimenez, S; Rossi, SE; Truong, MT; Carrillo, J; Erasmus, JJ (January 2010). "Lipoid pneumonia: spectrum of clinical and radiologic manifestations.". AJR. American journal of roentgenology 194 (1): 103–9. doi:10.2214/ajr.09.3040. பப்மெட்:20028911. https://archive.org/details/sim_ajr-american-journal-of-roentgenology_2010-01_194_1/page/103.