கொழுமியச்சிதைப்பி
கொழுமியச்சிதைப்பி (Lipase), கொழுப்புகளை (கொழுமியங்களை) உருவாக்கும் அல்லது சிதைக்கும் (நீராற்பகுத்தல்) பணிகளில் வினையூக்கம் செய்யும் நொதியமாகும்[1]. கொழுமியச்சிதைப்பிகள், மணமியச்சிதைப்பிகளின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும்.
பெரும்பாலான உயிரினங்களில் கொழுமியச்சிதைப்பிகள் உணவுக் கொழுமியங்களின் (உதாரணமாக, டிரைகிளிசரைடுகள், கொழுப்புகள், எண்ணெய்கள்) செரிமானம், பெயர்ச்சி மற்றும் பக்குவப்படுத்துதல் ஆகியப் பணிகளில் இன்றியமையாப் பங்கு வகிக்கின்றன. கொழுமியச்சிதைப்பிகளைக் குறிமுறைப்படுத்தும் மரபணுக்கள் சில தீநுண்மங்களிலும் (வைரசுகள்) காணப்படுகின்றது[2][3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Svendsen A (2000). "Lipase protein engineering". Biochim Biophys Acta 1543 (2): 223–228. doi:10.1016/S0167-4838(00)00239-9. பப்மெட்:11150608.
- ↑ Afonso C, Tulman E, Lu Z, Oma E, Kutish G, Rock D (1999). "The Genome of Melanoplus sanguinipes Entomopoxvirus". J Virol 73 (1): 533–52. பப்மெட்:9847359.
- ↑ Girod A, Wobus C, Zádori Z, Ried M, Leike K, Tijssen P, Kleinschmidt J, Hallek M (2002). "The VP1 capsid protein of adeno-associated virus type 2 is carrying a phospholipase A2 domain required for virus infectivity". J Gen Virol 83 (Pt 5): 973–8. பப்மெட்:11961250.