கொவ்னு என்பது மெய்டேய் புராணங்களிலும், பண்டைய காங்லீபாக்கின் (பண்டைய மணிப்பூர்) மதத்திலும் உள்ள ஒரு தெய்வமாவார். அவர் கௌபாலு கடவுளின் துணைவியாவார். [1] [2] வடக்கு திசையின் காவலாளியாக வனங்கப்படுகிறார். [3] கொவ்னுவுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. அவரது முக்கிய வீடு கொவ்னு மலையிலும் மற்றொரு வீடு கௌப்ரு மலையிலும் உள்ளன. அங்கு அவரது கணவர் கௌபாலு ( கௌப்ரு ) வசிக்கிறார். [4] அவர் குல்லக்பாவின் (கிராமத் தலைவர்) தெய்வமாக கௌப்ருவுடன் வழிபடப்படுகிறார். [5] நிங்தோ புத்திபாவின் ஆட்சிக்குப் பிறகு, கொவ்னு மற்றும் கௌப்ரு ஆகியோர் பண்டைய மணிப்பூரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்தனர் என்று கூறப்படுகிறது. [6]

கொவ்னு
மய்கெய் இங்காக்பா லாய்-இல் ஒருவர்
கொவ்னு
அதிபதிவடக்கின் அதிபதி
பருவநிலைக் கடவுள்
வேறு பெயர்கள்கௌனூ
எழுத்து முறை
வகைமெய்டேய் இனப் பெண் தெய்வம்
இடம்கௌப்ரு மலை
துணைகௌபாலு (கௌப்ரு)
குழந்தைகள்லோயல்க்பா, தௌடு நுங்தெல் லைபா
சமயம்பண்டைய மணிப்பூர்
விழாக்கள்இலாய் அரோபா

அவர் தூர வடக்கின் பனியில் வசிக்கிறார். காங்தெம் என்றும் அழைக்கப்படுகிறார். [7] [8]

விளக்கம் தொகு

 
கொவ்னு

கொவ்னு என்பது காலநிலை மற்றும் வானிலையை மாற்றும் தெய்வங்களில் ஒன்றாகும். அவரது கணவர் கௌபாலு மற்றும் அவரது மகன் லோயலக்பா ஆகியோரும் வானிலை தெய்வங்களாவர். ஆண்டில் மழை நன்றாக இருந்தால், அது கோனு தேவியால் ஏற்படுகிறது என்று மெய்டேய் மக்கள் நம்புகிறார்கள். கொவ்னு தேவி தட்பவெப்ப நிலையை மாற்றினால், வெள்ளம் அரிதாகவே இருக்கும். கொவ்னுவின் செயல்பாடுகளில் பயிர் விளைச்சல் நன்றாக உள்ளது எனவும், எல்ல வளங்களும் பேணப்படுவதாகவும் மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்லனர். [9]

புராணம் தொகு

காதல் மற்றும் திருமணம் தொகு

கௌப்ரு மலையின் மேற்குச் சரிவுகளில் பருத்திச் செடிகளைத் தேடியபோது, கொவ்னு முதன்முறையாக கௌபாலுவைச் சந்தித்தார். முதல் பார்வையிலேயே இருவரும் காதல் கொண்டனர். கொவ்னு கௌபாலுவிடம் திருமண நிச்சயத்திற்காக எல்லா வகையான பழங்களையும் கொண்டு வரச் சொன்னாள். அவர் அவ்வாறு செய்யத் தவறினால் அவரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டோம் என்றார். எனவே, ஒரு சனிக்கிழமையன்று, மலைகள் மற்றும் சமவெளிகளின் அனைத்து தெய்வங்களுடன் கௌபாலு ஒரு சந்திப்பு நடத்தினார். அவர்கள் அனைவரும் அனைத்து வகையான பழங்களையும் தயார் செய்தனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை திருமணத்தைத் திட்டமிட்டனர். [10]

அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன், தேவதைகள் கொவ்னுவின் இருப்பிடத்திற்கு பழங்களைக் கொண்டு வந்தனர். ஆண் தெய்வங்களும் கௌபாலுடன் அந்த இடத்திற்கு வந்தனர். தெய்வங்கள் காணாமல் போன இரண்டு பழங்களைக் கண்டுபிடித்தனர். அவை ஹெய்க்ரு ( இந்திய நெல்லிக்காய், ஃபில்லந்தஸ் எம்பிலிகா ) மற்றும் ஹெய்னிங் ஆகியவையாகும். பின்னர், கொவ்னு திருமணத்தை நிராகரித்தார். இதில், கௌபாலு, கடைசியாக சந்தித்தபோது தான் கர்ப்பமாக இருந்ததால், தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று கூறினார். [11] அவர் ஏற்கனவே கருவுற்றிருக்கும் போதே, கொவ்னுவின் அதிகப்படியான நிபந்தனைகளால் மற்ற ஆண் கடவுள்கள் கோபமடைந்தனர். கொவ்னுவின் குழந்தைக்கு அடுத்த பிறவியில் அவள் ஒரு கல் பலகையில் பிறப்பாள் என்று சாபம் வைத்தார்கள். குழந்தை பிறக்கும்போது பூவாக மாறும்படி தெய்வங்கள் சபிக்கவிருந்தன. ஆனால் கொவ்னுவுக்கு போதுமான தண்டனை கிடைத்ததால் அவர்கள் அதைச் செய்யவில்லை. வெட்கமடைந்த கொவ்னு, சூரிய உதயத்தில் பரிசுகள் அனைத்தும் கல்லாக மாறும் என்று சபித்தார். சூரியன் உதித்தவுடன், பரிசுகள் அனைத்தும் கற்களாக மாறின. [12]

லீஸ்னாவின் பிறப்பு - சபிக்கப்பட்ட குழந்தையின் பிறப்பு தொகு

கொவ்னு "லீஸ்னா" ( லைஸ்னா, லீசானா, லைசானா ) என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மகள் வளர்ந்ததும், அவள் தந்தையைப் பற்றி கொவ்னுவிடம் கேட்டாள். கொவ்னுவும் அவளிடம் சொன்னார். லீஸ்னா தனது தந்தையின் இடத்திற்குச் சென்று அவரைச் சந்திக்கக் கோரினாள். கொவ்னுவும் அவளைச் செல்ல அனுமத்தித்தார். செல்லும் வழியில், லீஸ்னா பகாங்பாவை சந்தித்தார். [13] அவர்கள் காதலர்களாக மாறினர். பின்னர், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். லீஸ்னா பெற்றோரைப்போல் அல்லாது ஒரு மனிதைனப் பெண்ணாக இருந்ததால், அவள் இறுதிக்காலத்தின் போது இறந்துவிட்டாள். [14]

தௌடு நுங்தெல் லீமாவின் தத்தெடுப்பு - சபிக்கப்பட்ட குழந்தையின் அடுத்த அவதாரம் தொகு

கொவ்னுவும் கௌபாலுவும் ஒன்றாக வாழ்ந்தனர். ஒருமுறை லீமாரல் சிதாபி இருவரின் மகளாக அவதாரம் எடுக்க முடிவு செய்தார். எனவே, லீமாரல் ஒரு பெண் குழந்தையாக அவதாரம் எடுத்தார். அன்றைய தினம், கொவ்னுவும் கௌபாலுவும் ஒரு மலைப்பாங்கான பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கௌபாலுவுக்கு மிகவும் தாகம் எடுத்தது. கொவ்னுவின் குடம் காலியாக இருப்பதைக் கண்டார். தாகம் தாங்க முடியாமல் ஆற்றங்கரையில் தண்ணீர் குடிக்கச் சென்றார். புதிதாகப் பிறந்த ஒரு பெண் குழந்தை ஆற்றுப் படுகையின் ஒரு கல் பலகையில் கிடப்பதைக் கண்டார். பெண் குழந்தைக்காக யாராவது அருகில் இருக்கிறார்களா என அறிந்துகொள்ள மூன்று முறை கத்தினார் கௌபாலு. யாரும் பதிலளிக்கவில்லை. எனவே, கௌபாலுவும் கொவ்னுவும் குழந்தையைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தனர். [15]

இருவரும் அந்த பெண்ணை தங்கள் சொந்த மகளாக தத்தெடுத்தனர். அவளுக்கு மூன்று பெயர்கள் கொடுத்தார்கள். நீரோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு "இபோக் லீமா" ("ஈபோக் லீமா") என்றும் , கல் பலகையில் கிடத்தப்பட்டதால் குழந்தைக்கு தௌடு நுங்தெல் லீமா என்றும் , குழந்தை அழகாகவும் பிரகாசமாகவும் இருந்ததால், குழந்தைக்கு "தைபாங் நகன்பி" என்றும் பெயர் சூட்டப்பட்டது. [16]

கொவ்னு மற்றும் லோயலக்பா தொகு

ஒருமுறை கொவ்விடம் அவரது மகன் லோயலக்பா தௌடு நுங்தெல் லீமாவின் உண்மையான தோற்றம் பற்றி கேட்டார். தௌடு நுங்தெல் லீமா உண்மையில் அவரது உண்மையான சகோதரியா இல்லையா என்று லொயலக்பா சந்தேகப்பட்டார். தௌடு நுங்தெல் லீமாவின் ரகசியத்தை தங்கள் மகனுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று கௌபாலு ஏற்கனவே கொவ்னுவை எச்சரித்திருந்தார். எனவே, முதலில், கொவ்னு அவனிடம் பொய் சொன்னார். [17] ஆனால் லோயலக்பாவின் கோபத்தில், அவர் அவனிடம் உண்மையைச் சொல்ல முடிவு செய்தார். ஆனால் கொவ்னு மற்றும் லொயலக்பா இருவரும் கொவ்பாலுவின் இல்லத்தில் இருந்ததால், அவர் அதைப் பற்றி எதுவும் பேசத் துணியவில்லை. கௌபாலு அதைக் கேட்டுவிடுவாரோ என்று பயந்தார். கௌபாலுவின் அனுமதியுடன் கொவ்னுவும் அவள் மகன் லொயலக்பாவும் அவளது இல்லத்திற்குச் சென்றனர். உண்மையை வெளிப்படுத்த பாதுகாப்பான இடமாக அது இருந்தது. [18] தானும் கௌபாலுவும் ஆற்றில் ஒரு கல் பலகையில் படுத்திருந்த தௌடு நுங்தெல் லீமாவை எப்படிக் கண்டார்கள் என்பதை லொயலக்பாவிடம் கொவ்னு விவரித்தார். தௌடு நுங்தெல் லீமா உண்மையில் அவர்களின் வளர்ப்பு மகள் என்றும் பிறப்பால் மகளல்ல என்றும் அவர் உண்மையைக் கூறினார். [19] பின்னர், கொவ்னுவின் மகன் லோயலக்பாவும், கொவ்னுவின் வளர்ப்பு மகள் தௌடு நுங்தெல் லீமாவும் திருமணம் செய்து கொண்டனர். [20]

 
கொவ்னு

வழிபாட்டு முறைகள் மற்றும் கோவில்கள் தொகு

கொவ்னுவும் அவரது கணவர் கௌபாலுவும் மணிப்பூரின் பல வழிபாட்டு முறைகளிலும் புனிதத் தலங்களிலும் வழிபடப்படுகின்றனர். மயங் லாங்ஜிங், அவாங் குன்னோவ், சென்ஜாம், சிராங், லோயிடாங் குன்னூ, டிங்ரி, கவுட்ருக், அவாங் போட்சாங்பாம், சைரெம் குல், கமெங், சரோதெல், லைரெல் சாஜிக், லைரல் காபி, ஹெய்பொங்போக்பி, நோங்சுப் சஞ்சென்பாம், ஹாங்சங்ஹெல்பாம், ஹாங்சங்ஹெல்பாம் குவாக் சிபாய், நரேல்கோஞ்சின், தம்னாபோக்பி, அவாங் செக்மாய், லீம்ராம், பும்லோ கெய்ரோய், பும்லோ சிபாய், போட்சங்பாம் தூரிபி, சமுஷாங், கெய்னௌ தோங்தாக், கோங்காம்பட், ஆகாம், மொரோக் இங்கோல், லம்பல் குல், ஃபாயிங், ஹவுங் குல், ஃபாயிங்ஹாபிங் போன்ற பல இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. [21] [22] மெய்டேய் கலாச்சாரத்தின் படி, கொவ்னு மற்றும் கௌபாலு ஆகியோர் மேற்கூறப்பட்ட இடங்களின் பாதுகாவலர்களாக உள்ளனர். [22]

மணிப்பூரில் உள்ள செஞ்சன் சிராங் கிராமத்தில், எபெந்தௌ கோனு லைரெம்பி லை ஹராஃபம் என்ற தெய்வத்தின் சன்னதி உள்ளது. [23]

மேற்கோள்கள் தொகு

  1. name="Ibemhal 2000 222">Ibemhal, Thounaojam Chanu (2000) (in mni). Haoreima Shambubi. பக். 222. https://archive.org/details/in.ernet.dli.2015.467054/page/n222/mode/2up. 
  2. Neelabi, sairem (2006) (in mni). Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. பக். 42. https://archive.org/details/in.ernet.dli.2015.466636/page/n42/mode/2up. 
  3. name="Neelabi 2006 46">Neelabi, sairem (2006) (in mni). Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. பக். 46. https://archive.org/details/in.ernet.dli.2015.466636/page/n46/mode/2up. 
  4. name="Ibemhal 2000 222"
  5. Devi, Lairenlakpam Bino (2002) (in en). The Lois of Manipur: Andro, Khurkhul, Phayeng and Sekmai. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-849-5. https://books.google.com/books?id=tIBymmBWqgsC&q=kounu+deities+Khullakpa&pg=PA54. 
  6. Tensuba, Keerti Chand (1993) (in en). Genesis of Indian Tribes: An Approach to the History of Meiteis and Thais. Inter-India Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-210-0308-7. https://books.google.com/books?id=GmZuAAAAMAAJ&q=kounu+leima+koubru+. 
  7. The Pleasing of the Gods: Meitei Lai Haraoba. https://books.google.com/books?id=COCBAAAAMAAJ&q=kounu+Lairembi. 
  8. The Pleasing of the Gods: Meitei Lai Haraoba. https://books.google.com/books?id=COCBAAAAMAAJ&q=kounu+goddess. 
  9. name="Neelabi 2006 46"> Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. https://archive.org/details/in.ernet.dli.2015.466636/page/n46/mode/2up. Neelabi, sairem (2006). Laiyingthou Lairemmasinggee Waree Seengbul (in Manipuri). p. 46.
  10. Mera Singh, Pukhrambam (1974) (in mni). Ingelei. பக். 11. https://archive.org/details/in.ernet.dli.2015.267436/page/n11/mode/2up. 
  11. Ingelei. https://archive.org/details/in.ernet.dli.2015.267436/page/n12/mode/2up. 
  12. Ingelei. https://archive.org/details/in.ernet.dli.2015.267436/page/n13/mode/2up. 
  13. Mera Singh, Pukhrambam (1974) (in mni). Ingelei. பக். 14. https://archive.org/details/in.ernet.dli.2015.267436/page/n14/mode/2up. 
  14. Mera Singh, Pukhrambam (1974) (in mni). Ingelei. பக். 36. https://archive.org/details/in.ernet.dli.2015.267436/page/n36/mode/2up. 
  15. Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. https://archive.org/details/in.ernet.dli.2015.466636/page/n43/mode/2up. 
  16. Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. https://archive.org/details/in.ernet.dli.2015.466636/page/n44/mode/2up. 
  17. মারজিং খুনথোকলোন. https://archive.org/details/dli.language.1347/page/n125/mode/2up. 
  18. মারজিং খুনথোকলোন. https://archive.org/details/dli.language.1347/page/n126/mode/2up. 
  19. মারজিং খুনথোকলোন. https://archive.org/details/dli.language.1347/page/n127/mode/2up. 
  20. The Lois of Manipur: Andro, Khurkhul, Phayeng and Sekmai. https://books.google.com/books?id=tIBymmBWqgsC&q=loyarakpa+his+wife+Thoudu+Nungthel+Leima&pg=PA55. 
  21. Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. https://archive.org/details/in.ernet.dli.2015.466636/page/n46/mode/2up. Neelabi, sairem (2006). Laiyingthou Lairemmasinggee Waree Seengbul (in Manipuri). p. 46.
  22. 22.0 22.1 Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. https://archive.org/details/in.ernet.dli.2015.466636/page/n47/mode/2up. 
  23. Shrine website[தொடர்பிழந்த இணைப்பு]
  • 1 2 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொவ்னு&oldid=3915157" இலிருந்து மீள்விக்கப்பட்டது