கோகிமா தலைநகர் பண்பாட்டு மையம்
கோகிமா தலைநகர் பண்பாட்டு மையம் (Kohima Capital Cultural Center) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரமான]] கோகிமாவில் அமைந்துள்ளது. காவல்துறை இருப்பு மலையில் ஒரு பண்பாட்டு மையமாக இது அமைந்துள்ளது. ஒரு பல்நோக்கு மண்டபத்தைக் கொண்ட இம்மையம் குடிமக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது. நாகாலாந்தில் மிகப்பெரிய 1800 பேர் அமரக்கூடிய பிரதான மண்டபம் இங்குள்ளது.
கோகிமா தலைநகர் பண்பாட்டு மையம் Kohima Capital Cultural Center | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
இடம் | காவல்துறை இருப்பு மலை, கோகிமா, நாகாலாந்து |
ஆள்கூற்று | 25°39′37″N 94°6′3″E / 25.66028°N 94.10083°E |
கட்டுமான ஆரம்பம் | 2005 |
நிறைவுற்றது | நவம்பர் 30, 2021 |
துவக்கம் | திசம்பர் 1, 2021 |
செலவு | ₹ 362 மில்லியன் (ஐஅ$ 5 million) |
இந்த மையத்தில் கண்காட்சி அரங்குகள், 150 இருக்கைகள் கொண்ட மாநாட்டு அரங்கம், சரக்கறையுடன் கூடிய உணவகம், 40 கார்களுக்கான பிரத்யேக அடித்தள நிறுத்துமிட வசதியுடன் மேலும் பல வசதிகள் உள்ளன.[1]
வரலாறு
தொகுபண்பாட்டு மையத் திட்டம் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது [2] கட்டுமானமும் விரைவில் தொடங்கியது, ஆனால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நில தகராறு பிரச்சினையால் பணி நிறுத்தப்பட்டது. கோகிமா சிறப்பு நகர மேம்பாட்டு நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ். கட்டுமானம் 2019 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. நவம்பர் 2021 இல் அதன் திட்டமிடலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டது [3] [4] பண்பாட்டு மையம் [5] டிசம்பர் 2021 அன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
அமைவிடம்
தொகுதலைநகர் பண்பாட்டு மையம் தேசிய நெடுஞ்சாலை 2 மற்றும் 29 ( ஆசிய நெடுஞ்சாலை 1 மற்றும் 2 ) வழியாக என்.எசு.எப். தியாகிகள் பூங்காவிற்கு மேலே காவல்துறை இருப்பு மலையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "'World Class' Capital Cultural Hall in Nagaland". The Morung Express. 1 December 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2022.
- ↑ "10% Lumpsum Provision for Development of North Eastern States". www.uddngl.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
- ↑ "Kohima to come up with five projects under Smart City project". 15 February 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
- ↑ "Capital Cultural Hall expected to be completed ahead of schedule". 10 November 2021. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
- ↑ "CM calls on officers to take ownership, know policies and governance of issues". 27 November 2021. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.