கோகுலானந்த மொகந்தி

இந்திய அரசியல்வாதி

கோகுலானந்த மொகந்தி (Gokulananda Mohanty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1899 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் தேதியன்று உதயநாத் மொகந்தி மற்றும் கனக் தேவி தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். கோகுலானந்த மொகந்தி இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக ஒடிசா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். ஒடிசா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 1 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு பந்த் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், பின்னர் 3 ஆவது மக்களவைக்கு பாலசோர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

கோகுலானந்த மொகந்தி
Gokulananda Mohanty
கோகுலானந்த மொகந்தியின் உருவப்படம்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1962–1967
முன்னையவர்பாகாபட் சாகு
பின்னவர்சமரேந்திர குண்டு
தொகுதிபாலாசோர் மக்களவைத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
திசம்பர், 1899
இறப்பு4 திசம்பர் 1974 [1]
பத்ரக் ,ஒடிசா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கனக் தேவி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. India. Parliament. Lok Sabha (1974). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 1. https://books.google.com/books?id=21ZPAQAAMAAJ. பார்த்த நாள்: 15 July 2021. 
  2. Atul Chandra Pradhan (1992). The nationalist movement in a regional setting, 1920-34: the rise of Congress to power in Orissa. Amar Prakashan. பக். 156. https://books.google.com/books?id=jmswAQAAIAAJ. பார்த்த நாள்: 16 November 2019. 
  3. India. Parliament. Lok Sabha (1966). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 2415. https://books.google.com/books?id=Ilw3AAAAIAAJ. பார்த்த நாள்: 16 November 2019. 
  4. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 324. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 16 November 2019. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுலானந்த_மொகந்தி&oldid=3805586" இலிருந்து மீள்விக்கப்பட்டது