கோக்கண்டன் இரவி

கோக்கண்டன் இரவி என்பவன் கொங்கு நாட்டை அரசாண்ட அரசனாவான். இவன் சேரர் குலம் என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இவர் கள்வர் குலத்தை சேர்ந்தவர்..[1]

இவன் களப்பிரன் என்று கூறும் கருதுகோள்கள்

தொகு

சி. ஆர். சீனிவாசன் என்ற தொல்லியல் ஆய்வாளர் 1970களின் இறுதியில் தாராபுர வட்டம் பொன்னியவாடியில் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தார்.[2][3] இந்த 2 கல்வெட்டுகளில் முறையே பௌமந் த்யவ்ரத னாகிய கோக்கண்டனிரவி[2][3] என்றும் சந்த்ராதித்ய குலதிலகன் சார்வ பௌமன் கலிநிருப கள்வனா இன கோக்கண்டனிரவி[2][3] என்றும் உள்ளன. இதனால் களப்பிரனென்னும் கலி அரசன் என்று களப்பிரர் பற்றி குறிப்பிடும் வேள்விக்குடி செப்பேட்டுச் செய்திகளின் வடமொழி வடிவமே கலிநிருப கள்வ என்று மாறியிருக்கலாம்.[1] இதைக்கொண்டே இவன் களப்பிர அரசன் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறான்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 நடன காசிநாதன் (1981). களப்பிரர். தமிழ்நாட்டு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை.
  2. 2.0 2.1 2.2 Srinivasan C R. Epigraphica Indica. Indian Archeaological Society. pp. pp 37-43. {{cite book}}: |pages= has extra text (help)
  3. 3.0 3.1 3.2 Indian Archeology 1961-62 -A Review. Indian Archeaological Society. 1961–1962.{{cite book}}: CS1 maint: date format (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்கண்டன்_இரவி&oldid=2442370" இலிருந்து மீள்விக்கப்பட்டது