நடன காசிநாதன்

நடன காசிநாதன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் (Tamil Nadu Archaeological Research Centre) நிறுவனரும் ஆவார்.[1]. மேலும் தமிழர்களின் வரலாற்று பழமை நிறுவல் ஆராய்ச்சி நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

நாணயவியல்

தொகு

இவர் வெளியிட்ட தமிழக காசு இயல் புத்தகம் வெளிவரும் முன்பு முத்திரை காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளதால் வடவிந்தியா வழியே தமிழகத்துக்கு இக்காசுகள் வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கருதினர். அந்நேரத்தில் இவர் வெளியிட்ட தமிழக முத்திரைக்காசுகளின் பட்டியல் அதை உறுதிப்படுத்தின.

ஆய்வுக் கட்டுரைகள்

தொகு

இவர் வெளியிட்ட ஆய்வு நூல்கள் மற்றும் கட்டுரைகளில் சில,

  1. தமிழர் காசு இயல் (நூல்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  2. தமிழக கல்வெட்டோடு காணப்படும் குறியீடுகள், பத்தாவது கருத்தரங்கு, ஆய்வுக்கோவை.
  3. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் அண்மைக் கண்டுபிடிப்புகள், ஆவணம் இதழ்.
  4. Antiquity of sea voyage in Tamilnadu.

ஆய்வு நூல்கள்

தொகு
  1. கல்லெழுத்துக்கலை [2]
  2. முத்தில் முகிழ்த்த முத்தரையர்[3]
  3. வன்னியர்
  4. தென்பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு
  5. மண்ணும் மாந்தரும்
  6. தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள்
  7. சோழ வேந்தர் பரம்பரை வன்னியப் பாளையக்காரர் வரலாறு
  8. பூம்புகாரும் கடல் அகழாய்வும்
  9. பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள்
  10. பண்டைத் தடயம், மா.சந்திரமூர்த்தி என்றவருடன் சேர்ந்து வெளியிட்ட புத்தகம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Govt. should encourage archaeology: former MP
  2. கல்லெழுத்துக்கலை
  3. author:"நடன காசிநாதன்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடன_காசிநாதன்&oldid=3487222" இலிருந்து மீள்விக்கப்பட்டது