கோங்சான் கேளையாடு

கோங்சான் கேளையாடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
முந்தியாகசு
இனம்:
மு. கோங்சானென்சிசு
இருசொற் பெயரீடு
முந்தியாகசு கோங்சானென்சிசு

கோங்சான் கேளையாடு (Gongshan muntjac) என்பது வடமேற்கு யுன்னான், தென்கிழக்கு திபெத்து, வடகிழக்கு இந்தியா (குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம்) மற்றும் வடக்கு மியான்மரில் உள்ள கோங்சான் மலைகளில் வாழும் ஒரு மான் சிற்றினம் ஆகும் ஆகும்.[2]

தொடர்ந்து வேட்டையாடுவது இதன் உயிர்வாழ்வுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். இதன் எண்ணிக்கையினைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றாலும், இவை பெரும்பாலும் ஒளிப்படக் கருவி பதிவு ஆய்வுகள் மூலம் காணப்படுகின்றன. இதன் மூலம் கோங்சான் கேளையாடு ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மியான்மரில் உள்ள காகாபோராசி தேசியப் பூங்கா மற்றும் போன்கன்ராசி வனவிலங்கு காப்பகம் ஆகிய இரண்டு முக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் இவை காணப்படுகின்றன.[1]

மரபணு ஆய்வுகள் இது முடிகொண்ட கேளையாட்டுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது என்பதைக் காட்டுகின்றன. இந்த நிலைப்பாடு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், வெவ்வேறு நிறங்கள் இருந்தபோதிலும் ஒரே சிற்றினமாகக் கருதப்படும் அளவுக்கு நெருக்கமாக இருக்கலாம்.[1] அருணாச்சலப் பிரதேசத்தில் முடிகொண்ட முன்டியாக்கசு கிரினிப்ரான்கள் கோங்சான் கேளையாடு எனக் கருத்துக்கள் உள்ளன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Timmins, R.; Duckworth, J.W. (2016). "Muntiacus gongshanensis". IUCN Red List of Threatened Species 2016: e.T13926A22160596. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T13926A22160596.en. https://www.iucnredlist.org/species/13926/22160596. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Choudhury, A.U. (2009).
  3. Choudhury, A.U. (2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்சான்_கேளையாடு&oldid=4118865" இலிருந்து மீள்விக்கப்பட்டது