கோசிமோ பாம்பி

காசிமோ பாம்பி (Cosimo Bampi) (பிறப்பு: செப்டம்பர் 21,1980) ஒரு இத்தாலிய சார்பியல் அறிஞரும் மற்றும் அண்டவியல் வல்லுனரும் ஆவார் , இவர் தற்போது சீனாவின் சாங்காயில் உள்ள புதான் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.[1][2]

காசிமோ பாம்பி
Cosimo Bambi
பிறப்பு (1980-09-21) 21 செப்டம்பர் 1980 (age 42)



புளோரன்சு, இத்தாலி
தேசியம் இத்தாலியர்
Education
  • புளோரன்சு பல்கலைக்கழகம் ( இளம் அறிவியல்)
  • பெராரா பல்கலைக்கழகம் (முனைவர்)
அறியப்பட்ட
விருதுகள்
  • மாக்னோலியா வெள்ளி விருது (2018)
  • 1000 திறமையாளர்கள் விருது (2012)
அறிவியல் தொழில்
களங்கள் பொது சார்பியல்



இயற்பியல்



நிறுவனங்கள்
முனைவர் வழிகாட்டி அலெக்சாந்தர் திமிரியேவிச் தோல்கோவ்

பாம்பியின் ஆராய்ச்சி ஆர்வங்களில் பொது சார்பியல் , கருந்துளைகள் , ஈர்ப்புக் குலைவு தொடக்க காலப் புடவியின் இயற்பியல் ஆகியவற்றின் வலுவான களச் சோதனைகள் அடங்கும். மேற்கூறிய அனைத்து தலைப்புகளிலும் 100 க்கும் மேற்பட்ட வெளியீடுகளைக் கொண்ட இவர்டாடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறார். துகள் அண்டவியல் , கருந்துளைகள், பொது சார்பியல் பற்றிய மூன்று தனிவரைவு நூல்களையும் அவர் எழுதியுள்ளார். குவைய பாம்பி விளைவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

பாம்பி 2003 இல் புளோரன்சு பல்கலைக்கழகத்தில் இலாரியா பட்டமும் , 2007 இல் பெராரா பல்கலைக்கழகத்தில் சாழ்சா டோல்கோவின் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்டமும் பெற்றார். தோக்கியோ பல்கலைக்கழகத்தில் ஐஎம்பியு, வெய்ன் அரசு பல்கலைக்கழகம், எல்எம்யு முனிச் ஆகியவற்றில் ஆராய்ச்சி பதவிகளை வகித்தார். 2012 ஆம் ஆண்டின் இறுதியில் ஆயிரம் இளம் திறமைகள் திட்டத்தின் கீழ் புதான் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் ஆசிரிய உறுப்பினராக சேர்ந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டில் இயற்பியலின் இளைய கட்டில் பேராசிரியராலமர்த்தப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் அவர் அம்போல்ட் ஆய்வுறுப்பினர் என்று பெயரிடப்பட்டார். தூபிங்கன் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பதவியைப் பெற்றார்.

முதன்மை விருதுகள் தொகு

  • சாங்காய் நகராட்சியின் மாக்னோலியா வெள்ளி விருது (2018)[3]
  • சீனாவில் உள்ள இத்தாலியத் தூதரகத்திலிருந்து சூ குவாங்கி பரிசு (2018)[4] அம்போல்ட் ஆய்வுறுப்பினர் என்று பெயரிடப்பட்டது (2015)[5]
  • ஆயிரம் இளம் திறமையாளர்கள் விருது (2012)[6]

புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் தொகு

கொசிமோ பாம்பி உயர் தாக்கக் காரணி இதழ்களில் முதல் அல்லது அதனுடன் தொடர்புடைய எழுத்தாளராக 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[7] அவர் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் ஒரு புத்தகத்தை தொகுத்துள்ளார்.

புத்தகங்கள் தொகு

  • C. Bambi, Introduction to General Relativity (Springer Singapore, 2018)
  • C. Bambi, Black Holes: A Laboratory for Testing Strong Gravity (Springer Singapore, 2017)
  • C. Bambi (Editor), Astrophysics of Black Holes (Springer-Verlag Berlin Heidelberg, 2016)
  • C. Bambi and A.D. Dolgov, Introduction to Particle Cosmology (Springer-Verlag Berlin Heidelberg, 2016)

குறிப்பிட்ட ஆவணங்கள் தொகு

  • Z. Cao et al., Testing general relativity with the reflection spectrum of the supermassive black hole in 1H0707-495, Phys. Rev. Lett. 120, 051101 (2018)
  • C. Bambi et al., Testing the Kerr black hole hypothesis using X-ray reflection spectroscopy, Astrophys. J. 842, 76 (2017)
  • C. Bambi, Testing black hole candidates with electromagnetic radiation, Rev. Mod. Phys. 89, 025001 (2017)
  • C. Bambi and E. Barausse, Constraining the quadrupole moment of stellar-mass black-hole candidates with the continuum fitting method, Astrophys. J. 731, 121 (2011)
  • C. Bambi and K. Freese, Apparent shape of super-spinning black holes, Phys. Rev. D 79, 043002 (2009)

மேற்கோள்கள் தொகு

  1. Fullerton, Jamie (17 January 2018). "Why an Italian astrophysicist decided to move to Shanghai.". Nature 553 (7688): S31. doi:10.1038/d41586-018-00549-w. பப்மெட்:29345671. Bibcode: 2018Natur.553S....F. 
  2. Cosimo Bambi, Department of Physics, Fudan University
  3. Chew, Alwyn (14 September 2018). "Scientist is in for the long run.". China Daily. http://www.chinadaily.com.cn/newsrepublic/2018-09/14/content_36939512.htm. பார்த்த நாள்: 7 October 2018. 
  4. Approfondimento sulla giornata della ricerca, Pechino 2018.. May 2018. https://accademicicina.org/2018/05/01/udpate-giornata-della-ricerca/. 
  5. Cosimo Bambi, Humboldt Network
  6. List of the winners of the Thousand Young Talents Award (3rd batch)
  7. Publication list from INSPIRE
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசிமோ_பாம்பி&oldid=3773190" இலிருந்து மீள்விக்கப்பட்டது