குசுக்கோ
(கோசுக்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குசுக்கோ என்பது பெரு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் அந்தீசு மலைத்தொடரில் உள்ள உருமாம்பா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 348,935 மக்கட்தொகையைக் கொண்ட இதுவே குசுக்கோ மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 3300 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரம் பண்டைய இன்காப் பேரரசின் தலைநகராகவும் விளங்கியுள்ளது. 1983-ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இது தற்போது புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர். பெரு அரசு இதனை பெரு நாட்டின் வரலாற்றுத் தலைநகரமாக அறிவித்துள்ளது.
குசுக்கோ
Cuzco, Qusqu | |
---|---|
அடைபெயர்(கள்): La Ciudad Imperial(The Imperial City) | |
குசுக்கோவின் மாவட்டங்கள் | |
Country | Peru |
Region | Cusco |
Province | குசுக்கோ மாகாணம் |
Founded | 1100 A.D. 1st |
அரசு | |
• வகை | மக்களாட்சி |
• நகரத்தந்தை (Mayor) | Marina Sequeiros Montesinos |
பரப்பளவு | |
• மொத்தம் | 70,015.3 km2 (27,033 sq mi) |
ஏற்றம் | 3,310 m (10,860 ft) |
மக்கள்தொகை 2007 | |
• மொத்தம் | 3,48,935 |
நேர வலயம் | ஒசநே-5 (PET) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (PET) |
இடக் குறியீடு | 84 |
இணையதளம் | www.municusco.gob.pe |
குசுக்கோ என்னும் இப்பெயர் கெச்சுவ மொழிச் சொல்லான குசுக்கோ வான்கா (ஆந்தை மலை எனப்பொருள் தருவது) என்னும் சொல்லில் இருந்து உருவானது.