கோடர்மா காட்டுயிர் காப்பகம்
கோடர்மா காட்டுயிர் காப்பகம் (Koderma Wildlife Sanctuary) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள கோடர்மா மாவட்டத்தின் கோடர்மா துணைப்பிரிவில் கோடர்மா (சமூக மேம்பாட்டுத் தொகுதி) வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
கோடரமா காட்டுயிர் காப்பகம் | |
---|---|
அமைவிடம் | கோடர்மா மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா |
ஆள்கூறுகள் | 24°32′29″N 85°34′34″E / 24.541328°N 85.576184°E |
பரப்பளவு | 150.62 சதுர கிலோமீட்டர்கள் (58.15 sq mi) |
நிறுவப்பட்டது | 1985 |
வலைத்தளம் | http://www.forest.jharkhand.gov.in/ |
புவியியல்
தொகுஅமைவிடம்
தொகுகோடர்மா வனவிலங்கு சரணாலயம் 24°32′29′′N 85°34′34′′E/24.541328 °N 85.576184 °E எனும் ஆள்கூற்றில் அமைந்துள்ளது. பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள கௌதம் புத்தா வனவிலங்கு காப்பகத்திற்கு அருகில் உள்ளது. இது 150.62 சதுர கிலோமீட்டர் சதுர மைல் பரப்பளவில் பரவியுள்ளது.[1]
குறிப்பு: அருகிலுள்ள வரைபடத்தில் மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிடத்தக்க இடங்களைக் காணலாம். வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களும் பெரிய முழுத் திரை வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
சரணாலயம்
தொகுகோடர்மா வனப் பிரிவில் 15062.77 ஹெக்டேர் பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகளாக உள்ளது. கோடர்மா மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, வனவிலங்கு பிரிவின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. காடுகளில் உள்ள முக்கிய மரங்கள், சால், பிஜா, கமார், கைர், பலாஷ், சலாய், செமல், பைர், அர்ஜுன், கரம், சிரிசு, காஜ், கேண்ட், மகலான், மகுவா, கரஞ்ச், ரட்டி போன்றவை.[2]
கோடர்மா வனவிலங்கு சரணாலயம் வறண்ட இலையுதிர் காடுகளின் மலைத்தொடர்களைக் கொண்டுள்ளது. இம்மலைத் தொடர் ஏராளமான சிற்றோடைகளைக் கொண்டுள்ளது. இங்குப் புலி, சிறுத்தை, கரடி, கடமான், கேளையாடு, நீலான், காட்டுப்பன்றி, மாபெரும் அணில், நரி, கழுதைப்புலி, மந்தி, முள்ளம்பன்றி போன்ற வனவிலங்குகளும் பல்வேறு பறவைகளும் ஊர்வன சிற்றினங்களும் உள்ளன.[1]
துவாஜதாரி பகார், மேகதாரி மற்றும் தாராகட்டி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன.[3]
மேகதாரி வனத்தில் ஓர் ஓய்வு இல்லம் உள்ளது.[3] உணவு மற்றும் தங்குமிடத்திற்கான பல்வேறு அரசு மற்றும் தனியார் வசதிகள் கோடர்மா பகுதியில் உள்ளன.
விலங்குகளைப் பார்ப்பது தற்செயலானது மற்றும் கோடர்மா வனவிலங்கு சரணாலயம் ஒரு விலங்கியல் பூங்கா அல்ல. இது ஒரு பொழுது போக்கு இடமாகும். மது அருந்துதல் மற்றும் பொழுதுபோக்கு என்ற பெயரில் மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Koderma Wildlife Saxtuary". Forest, Environment and Climate Change Department. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
- ↑ "Forest Department". Koderma district administration. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
- ↑ 3.0 3.1 3.2 "Koderma Wildlife Sanctuary at a glance" (PDF). Hazaribagh Wildlife Division. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.