கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறகுப் பந்தாட்டம்
இறகுப்பந்தாட்டம் 1992 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக முறையானப் போட்டியாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 6 ஒலிம்பியாடுகளில் போட்டியிடப்பட்டு வருகின்றது. ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் இதுவரை 63 வெவ்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் 19 நாடுகள் 6 முறையும் பங்கேற்றுள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளை இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்துகின்றது.
வரலாறு
தொகுமியூனிக் நகரில் நடந்த 1972 ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப்பந்தாட்டம் முதன்முதலாக காட்சிப்படுத்தப்படும் விளையாட்டாக அறிமுகமானது. இருபதாண்டுகள் கழித்து பார்செலோனாவில் 1992 போட்டிகளில் 4 போட்டிகள் நடத்தப்பட்டன; ஆண்கள், பெண்கள் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் நான்கு பதக்கங்கள், இரு வெண்கலப் பதக்கங்களுடன், வழங்கப்பட்டன. அடுத்து அட்லான்டாவில் நடந்த 1996 ஒலிம்பிக்கில், கலவை இணையருடன் 5 போட்டிகளாயிற்று. தவிரவும் இரண்டு தோற்ற அரையிறுதி ஆட்டக்காரர்களுடன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியும் அறிமுகமானது. இந்த போட்டி வடிவம் 2016 வரை நீடித்துள்ளது.
போட்டிகள்
தொகு- ஆண்கள் ஒற்றையர்
- ஆண்கள் இரட்டையர்
- பெண்கள் ஒற்றையர்bcfhj
- பெண்கள் இரட்டையர்
- கலவை இணையர்
பதக்கப்பட்டியல்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 17 | 8 | 15 | 40 |
2 | இந்தோனேசியா | 7 | 6 | 6 | 19 |
3 | தென் கொரியா | 6 | 7 | 6 | 19 |
4 | டென்மார்க் | 1 | 3 | 3 | 7 |
5 | சப்பான் | 1 | 1 | 1 | 3 |
6 | எசுப்பானியா | 1 | 0 | 0 | 1 |
7 | மலேசியா | 0 | 5 | 2 | 7 |
8 | ஐக்கிய இராச்சியம் | 0 | 1 | 2 | 3 |
9 | இந்தியா | 0 | 1 | 1 | 2 |
10 | நெதர்லாந்து | 0 | 1 | 0 | 1 |
11 | உருசியா | 0 | 0 | 1 | 1 |
மொத்தம் | 33 | 33 | 37 | 103 |
இந்தியாவிலிருந்து பதக்கம் பெற்றவர்கள்
தொகுஒலிம்பியாடு | போட்டியாளர் | போட்டி | பதக்கம் |
---|---|---|---|
2012 இலண்டன் | சாய்னா நேவால் | பெண்கள் ஒற்றையர் | வெண்கலப் பதக்கம் |
2016 இரியோ | புசார்லா வெங்கட சிந்து | பெண்கள் ஒற்றையர் | வெள்ளிப் பதக்கம் |