கோட்டை இராச்சியம்

(கோட்டே இராசதானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ரீ ஜயவர்த்தனபுரக் கோட்டையை மைய நிலையமாகக் கொண்டு அரசாட்சி நடைபெற்றதே கோட்டே அரசு அல்லது கோட்டே இராசதானி (Kingdom of Kotte). இது கி.பி. 15 நூற்றாண்டுக் காலப் பகுதியில் இலங்கையில் சீராக ஆட்சி நடைபெற்ற அரசாகும். இலங்கையை ஒரு குடைக் கீழ் கொண்டு வருதற்காக ஆட்சி நடந்தேறிய கடைசி அரசும் இதுவாகும்.

கோட்டே அரசு
இலங்கை
1412–1597
கொடி of கோட்டே அரசு
கொடி
தலைநகரம்கோட்டே
பேசப்படும் மொழிகள்சிங்களமொழி
அரசாங்கம்மன்னராட்சி
கோட்டை அரசு 
• 1412-1467
இலங்கையின் ஆறாம் பராக்கிரமபாகு (முதல்)
• 1508-1528
இலங்கையின் ஒன்பதாவது பராக்கிரமபாகு மன்னன் (களனியில்)
• 1551-1597
இலங்கை தர்மபால அரசன் (கடைசி)
வரலாறு 
• முழு இலங்கையையும் ஒற்றுமைப்படுத்துதல்
1412
• முடிவு
1597
முந்தையது
பின்னையது
ரைகம அரசு
போர்த்துக்கேய இலங்கை
சீதாவக்கை அரசு
கோட்டை அரசின் வரைபடம்

கோட்டை என்பதன் பொருள்

தொகு

சிங்களத்தில் கோட்டே என்பதன் பொருள் (பாதுகாப்பு) அரண் என்பதாகும். தமிழிலும் கோட்டை என்பது அரண்மனையையே குறிக்கின்றது. இந்த வகையில் அழகேசுவரர் மூலம் கட்டப்பட்ட முதலாவது கோட்டையையும் இது குறிப்பிடப்படுகிறது.

நிறுவல்

தொகு

மேற்குக் கடற்பகுதியிலிருந்து வந்த படையெடுப்பாளர்களின் தாக்குதல்களை முறியடிக்க, மூன்றாவது விக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் கம்பளை அரசின் அமைச்சர் [[|அழகக்கோனார்|அழகேசுவரன்]] (1370–1385) மூலம் கட்டப்பட்ட இந்தப் பாதுகாப்புக் கோட்டை, பின்னர் அதாவது 1412இல் ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் மூலம் தலைநகராகக் கொள்ளப்பட்டது. இப்பகுதியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலம் மூலம் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.[1]

பின்னிணைப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டை_இராச்சியம்&oldid=3956074" இலிருந்து மீள்விக்கப்பட்டது