Srivilliputhur

கோட்டைமலை
Kottamala
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Tamilnadu" does not exist.
உயர்ந்த இடம்
உயரம்2,019 m (6,624 அடி)[1]
ஆள்கூறு9°31′16″N 77°24′07″E / 9.521°N 77.402°E / 9.521; 77.402
புவியியல்
அமைவிடம்திருவில்லிபுத்தூர், ராசபாளையம், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொடர் ஆள்கூறு9°30'23"N 77°24'41"E •
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்
எளிய அணுகு வழிhike

கோட்டைமலை (Kottamalai) என்பது தமிழ்நாட்டில் உள்ள மிகவும் உயரமான மலைப்பகுதியில் ஒன்றாகும், இது தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள நரைத்த சாம்பல் நிற அணில்கள் வனவிலங்கு சரணாலயம் உள்ள பகுதியாகும், ராசபாளையம் அருகில் உள்ள அய்யனார் அருவிக்கு அருகாமையிலும் உள்ளது. இம்மலை சிகரத்தின் கிழக்கு பகுதியில் அடர்வனப்பகுதிக்குள் ஏராளமான காட்டு அருவிகள் உள்ளது, அதில் குறிப்பிடதக்கவை நீர்காத்த அய்யனார் அருவி, ராக்காச்சியம்மன் அருவி, செண்பகதோப்பு அருவி என உள்ளது, இவற்றை அடைய அடர்வனப் பகுதிகளுக்குள் நடைபாதை ஊடாக நடந்து செல்ல வேண்டும். இது கேரளாவின் பெரியார் வனவிலங்கு சரணாலயத்திற்கு கிழக்கு பகுதியில் தமிழ்நாட்டின் எல்லைக்குள் உள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலையில் 2,019m (6624 அடி) உயரத்தில் திருவில்லிபுத்தூர் அருகே அமைந்த உயர்ந்த மலைச் சிகரமாக இது உள்ளது[1]. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சில உயரமான சிகரங்களில் (பெரியார் பீடபூமியில் 2,000 மீட்டருக்கு உயரமான) இதுவும் ஒன்று.[2][3]

கோட்டமலை இந்தியாவின் தென்முனையில் அமைந்த 2019 மீட்டர் (6624 அடி) உயரம் உள்ள மலை உச்சியாகும். மதுரைக்கு தெற்கே உள்ள தென் மாவட்டங்களிலேயே விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் உயரமான மலை சிகரங்களில் இதுவே முதன்மையானது ஆகும்.

(இதனைத் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள மலைக்கோட்டையுடன் தவறுதலாகப் புரிதல் கொள்ளக்கூடாது)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Welcome to Periyar Tiger Reserve, Periyar Tiger Reserve, 2017, archived from the original on 3 November 2019, பார்க்கப்பட்ட நாள் 2017-08-29
  2. "Study Area and Methods" (PDF).
  3. MoEF, GGWLS. "Grizzled Squirrel Sanctuary" (PDF). GoI.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டைமலை&oldid=3487481" இலிருந்து மீள்விக்கப்பட்டது