கோட்டை அருங்காட்சியகம்

கோட்டை அருங்காட்சியகம் (Kotte Museum)(சிங்களம்: කෝට්ටේ කෞතුකාගාරය) என்பது இலங்கையின் சிறீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது பொறளை - பிடகோட்டே பிரதான வீதியில் எத்துல் கோட்டை பங்களா சந்தியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் நாட்டின் மேல் மாகாணத்திற்கான பிராந்திய அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தினை இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களம் பராமரிக்கின்றது.

கோட்டை அருங்காட்சியகம்
Kotte Museum
தொல்பொருள் அருங்காட்சியகம், கோட்டை
Map
நிறுவப்பட்டது1992
அமைவிடம்சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, இலங்கை
ஆள்கூற்று6°53′35.6″N 79°54′19.0″E / 6.893222°N 79.905278°E / 6.893222; 79.905278
வகைதொல்பொருளியல்

இந்த அருங்காட்சியகம் முதன்முதலில் 1992-ல் ஈ.டபிள்யூ. பெரேரா நினைவு அருங்காட்சியகமாக இஹல வளவ்வயில் நிறுவப்பட்டது.[1] மறைந்த அரசியல்வாதி ஈ.டபிள்யூ. பெரேராவின் வசிப்பிடமாக இருந்த இந்த அருங்காட்சியகம் 1995ஆம் ஆண்டில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அருங்காட்சியக கட்டிடம் ஐந்து கண்காட்சி அறைகளைக் கொண்டுள்ளது. கோட்டை மற்றும் கோட்டையினைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த இந்த அறைகள் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு பிராந்திய கொடிகள், ஆடைகள், சிலைகள், நாணயங்கள், வாள்கள், கத்திகள், துப்பாக்கிகள், ஆயுதங்கள், மட்பாண்டங்கள், வரைபடங்கள் மற்றும் ஈ.டபிள்யூ. பெரேரா பயன்படுத்திய பொருட்களின் தொகுப்பு மற்றும் டக்ளஸ் ரணசிங்கவினால் வழங்கப்பட்ட பொருட்களும் இங்குள்ள காட்சிப் பொருட்களில் அடங்கும்.[2][3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Archaeological Museum of Kotte – කෝට්ටේ පුරාවිද්‍යා කෞතුකාගාරය". Amazinglanka. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  2. "Kotte Museum (Regional)". Archaeological department of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  3. "Exploring the forgotten Kingdom of Kotte". Daily FT. 7 December 2013. Archived from the original on 14 March 2017. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டை_அருங்காட்சியகம்&oldid=3779452" இலிருந்து மீள்விக்கப்பட்டது