பொறளை

இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

பொறளை (Borella) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 08 ஆகும்.

பொறளை
බොරැල්ල
Borella
நகர்ப்புறம்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)

மக்களியல் தொகு

பொறளை பலதரப்பட்ட இனத்தவரும் மதத்தவரும் வாழுமிடமாக உள்ளது. இங்குள்ள முதன்மை இனத்தவராக சிங்களவரும் தமிழரும் உள்ளனர். சிறுபான்மையராக பரங்கியர்கள், இலங்கைச் சோனகர் மற்றும் பிறர் உள்ளனர்.

விளையாட்டுத் திடல்கள் தொகு

பள்ளிகள் தொகு

  • உவெசுலி கல்லூரி
  • பண்டாரநாயக்க வித்தியாலயம்
  • கேரி கல்லூரி
  • தேவி பாலிகா வித்தியாலயம்
  • சி. டபுள்யூ. டபுள்யூ. கன்னங்கரா வித்தியாலயம்
  • சுசாமியா வர்தனா மகா வித்தியாலயம்
  • இரத்னாவளி பாலிகா மகா வித்தியாலயம்
  • டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி

இடுகாடு தொகு

இங்குள்ள பொறளை கனத்தை இடுகாடு அனைத்து சமயத்தினருக்குமான கொழும்பின் முதன்மை இடுகாடாகும். இது 1840 இல் நிறுவப்பட்டது. இரண்டு உலகப் போர்களிலும் வீரமரணம் அடைந்தவர்களுக்கு தனியான இடம் உள்ளது. இங்கு எரியூட்டுவதற்கும் வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறளை&oldid=3850454" இலிருந்து மீள்விக்கப்பட்டது