கோத்தா கினபாலு மாநகராட்சி
கோத்தா கினபாலு மாநகராட்சி (மலாய்: Dewan Bandaraya Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu City Hall); (சுருக்கம்: DBKK) என்பது மலேசியா, சபா, மாநிலத்தில் கோத்தா கினபாலு மாநகரத்தையும்; கோத்தா கினபாலு மாவட்டத்தையும் நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் சபா மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.
கோத்தா கினபாலு மாநகராட்சி Kota Kinabalu City Hall Dewan Bandaraya Kota Kinabalu | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 02 பிப்ரவரி 2000 |
முன்பு | கோத்தா கினபாலு நகராட்சி (Miri Municipal Council) |
தலைமை | |
மாநகர முதல்வர் | நூர்லிசா அவாங் அலிப் (Noorliza Awang Alip) 1 சனவரி 2021 |
தலைமை இயக்குநர் | (காலியாக உள்ளது) 1 சனவரி 2022 |
குறிக்கோளுரை | |
இயற்கை உல்லாச மாநகரம் (Nature Resort City) | |
கூடும் இடம் | |
கோத்தா கினபாலு மாநகராட்சி தலைமையகம் 1, Jalan Bandaran, Pusat Bandar Kota Kinabalu, 88000 Kota Kinabalu, Sabah கோத்தா கினபாலு, சபா | |
வலைத்தளம் | |
www |
2000 பிப்ரவரி 2-ஆம் தேதி கோத்தா கினபாலு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு இந்த மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 351 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
பொது
தொகுமாநகராட்சி முதல்வரும்; மற்றும் 24 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற சபா மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; கோத்தா கினபாலு மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[1].
வரலாறு
தொகு1881-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Company (BNBC) தொடக்கக் காலத்தில் இருந்து ஜெசல்டன் (Jesselton) நகரத்தின் வரலாறு தொடங்குகிறது. ஜெசல்டன் என்பது கோத்தா கினபாலு மாநகரத்தின் பழைய காலனித்துவப் பெயராகும்.[2]
1946 சூன் 26-ஆம் தேதி பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. 15 ஜூலை 1946 முதல் 16 செப்டம்பர் 1963 வரையில், மலேசியா உருவாகும் வரையில் சபா மாநிலம், வடக்கு போர்னியோ பிரித்தானிய முடியாட்சியின் நிலப்பகுதியாக இருந்தது.[3]
கோத்தா கினபாலு நகராட்சி
தொகு1963-ஆம் ஆண்டு மலேசியா கூட்டமைப்பில் (Federation of Malaysia) இணையும் வரையில் கோத்தா கினபாலு நகரம் ஜெசல்டன் நகரம் என்றே அழைக்கப்பட்டது. 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெசல்டன் என்பது கோத்தா கினபாலு என மாறியது.[4]
பின்னர் நகர நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டு கோத்தா கினபாலு நகராட்சி என்று அழைக்கப்பட்டது. 2000 பிப்ரவரி 2-ஆம் தேதி கோத்தா கினபாலு நகரம், மாநகரம் எனும் தகுதியைப் பெற்றது. அதன் பிறகு ஒரு மாநகராட்சி மன்றம் நிறுவப்பட்டது.
தற்சமயம் கோத்தா கினபாலு மாநகரம், கோத்தா கினபாலு மாநகராட்சி (மலாய்: Dewan Bandaraya Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu City Hall); (சுருக்கம்: DBKK) எனும் மாநகராட்சியால் நிர்வகிக்கப் படுகிறது.
நிர்வாகப் பகுதிகள்
தொகு- தஞ்சோங் அரு - Tanjung Aru
- கெபாயான் - Kepayan
- கோத்தா கினபாலு நகரம் - Kota Kinabalu
- லூயாங் - Luyang
- இனனாம் - Inanam
- மெங்காத்தால் - Menggatal
- தெலிபோக் - Telipok
- செபாங்கார் - Sepanggar
பிரித்தானிய போர்னியோ
தொகு1941 முதல் 1945 வரை சரவாக்கில் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு (Japanese occupation of British Borneo); அப்போது கோத்தா கினபாலு நகராட்சிக் கழகத்தின் செயல்பாடுகள் தடைபட்டன.
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (ஆங்கிலம்: British North Borneo Company (BNBC) என்பது வடக்கு போர்னியோ எனும் சபா மாநிலத்தின் வளங்களை நிர்வகிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பிரித்தானிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1881 நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
1882-ஆம் ஆண்டில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு, சபாவை ஆட்சி செய்வதற்கான உரிமை கிடைத்தது.[5]
மிரி மாநகராட்சி முதல்வர்கள்
தொகு# | முதல்வர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1 | அப்துல் கனி அப்துல் ரசீட் | 2 பிப்ரவரி 2000 | 1 பிப்ரவரி 2005 |
2 | இலியாசு இப்ராகிம் | 2 பிப்ரவரி 2005 | 1 பிப்ரவரி 2011[6] |
3 | ஆபிதீன் மடிங்கீர் | 2 பிப்ரவரி 2011 | 1 பிப்ரவரி 2016 |
4 | யோ பூன் அய் | 2 பிப்ரவரி 2016 | 30 டிசம்பர் 2018 |
5 | நார்டின் சிமன் | 31 டிசம்பர் 2018 | 1 சனவரி 2021 |
6 | நூர்லிசா அவாங் அலிப் | 1 சனவரி 2021 | பதவியில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987
- ↑ "In the late 1800s, the British North Borneo Company (BNBC) began establishing colonies throughout North Borneo (now Sabah). In 1882, the British North Borneo Company founded a small settlement in an area known as Teluk Gaya which had been inhabited by the Bajau people". dbkk.sabah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
- ↑ Renton, Alexander Wood; Robertson, Maxwell Anderson; Pollock, Frederick; Bowstead, William (1908). Encyclopædia of the laws of England with forms and precedents by the most eminent legal authorities. Sweet & Maxwell.
- ↑ Great Britain. Foreign Office (1888). British and Foreign State Papers. H.M. Stationery Office.
- ↑ Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
- ↑ "Former cop Illiyas is new mayor of Kota Kinabalu". The Star. 21 January 2005. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.