கோனா இரகுபதி
கோனா இரகுபதி (Kona Raghupathi) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் பாபட்லா தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [1] 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பாபட்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய்எசுஆர் காங்கிரசு கட்சியை கோனா இரகுபதி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [2]
கோனா இரகுபதி Kona Raghupathi | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | காதே வெங்கட ரெட்டி |
தொகுதி | பாபட்லா |
2nd ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 18 சூன் 2019 – 18 செப்டம்பர் 2022 | |
முன்னையவர் | மண்டலி புத்த பிரசாத்து |
பின்னவர் | = வீர பத்ர ஸ்வாமி கோலகட்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சி |
பெற்றோர் | கோனா பிரபாகர் ராவ் (தந்தை) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகோனா ரகுபதி மகாராட்டிரா மற்றும் சிக்கிம் மாநிலங்களின் முன்னாள் ஆளுநராக இருந்த கோனா பிரபாகர ராவுக்கு மகனாகப் பிறந்தார். [3]
அரசியல் வாழ்க்கை
தொகு2014 ஆம் ஆண்டில், இவர் ஒய்எசுஆர் காங்கிரசு கட்சியின் சார்பில் பாபட்லா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு , 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் அன்னம் சதீசு பிரபாகரை எதிர்த்து வெற்றி பெற்றார். [4] [5] 2019 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பாபட்லா தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் துணைத் தலைவரும் ஆவார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kona Ragupathi Politician
- ↑ Bapatla (Andhra Pradesh) Assembly Constituency Elections
- ↑ Samuel Jonathan. "Bapatla: an interesting contest on the cards". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Bapatla-an-interesting-contest-on-the-cards/article16616247.ece.
- ↑ "MLA". AP State Portal. Archived from the original on 8 October 2014. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
- ↑ "Repalle Assembly 2014 Election Results". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ The Hindu. "Kona Raghupathi elected Assembly Deputy Speaker". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/kona-raghupathi-elected-assembly-deputy-speaker/article28067547.ece.