கோபால்தாரா தேயிலைத் தோட்டம்

கோபால்தாரா தேயிலைத் தோட்டம் (Gopaldhara Tea Estate) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் மிரிக் துணைப்பிரிவில் உள்ள மிரிக் சிடி தொகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டமாகும்.

கோபால்தாரா தேயிலைத் தோட்டம்
Gopaldhara Tea Estate
கோபால்தாரா தேயிலைத் தோட்டம்
அமைவிடம்டார்ஜிலிங் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
ஆள்கூறு26°55′24″N 88°09′44″E / 26.923435°N 88.162343°E / 26.923435; 88.162343
பரப்பு320 ha (790 ஏக்கர்கள்)
Elevation5,500 முதல் 7,000 அடிகள் (1,700 முதல் 2,100 m)
Owned byசோனா தேயிலைக் குழுமம்
திறக்கப்பட்டது1881 (1881)

சொற்பிறப்பியல் தொகு

1881ல் 'கோபால்' என்ற நபருக்குச் சொந்தமான பசுமையான நெல் வயல்களில் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டது. 'தாரா' என்பது உள்ளூர் நேபாளி மொழியில் ஒரு சிறிய நீரோடை என்பதாகும். கோபாலின் நெல் வயல்களில் பல சிறு ஓடைகள் குறுக்கிட்டன. இந்த இருசொற்களையும் சேர்த்து "கோபால்தாரா" எனப் பெயரிடப்பட்டது.[1]

வரலாறு தொகு

1881ஆம் ஆண்டில், தப்பு மற்றும் தாரா சாகிப்பிற்காக ஒரு புதிய தோட்டம் உருவாக்கப்பட்டது. 1920-ல் தேயிலைத் தோட்டத்தை கிங்சுலே வாங்கினார். இவர் இதை 1947-ல் மூல்ஜி சிக்கா நிறுவனத்திற்கு விற்றார். தல்சந்த் சாரியா 1953-54ல் கோபால்தாரா தேயிலைத் தோட்டத்தை வாங்கினார். 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இவரது மகன் சிவ் சாரியா மற்றும் அவரது பேரன் கிருசிகேசு சாரியா ஆகியோர் சோனா தேயிலைக் குழுமத்தின் பதாகையின் கீழ் கோபல்தாரா தேயிலைத் தோட்டத்தினை நிர்வகிக்கின்றனர். இந்த குழு டார்ஜிலிங்கில் உள்ள ரோகினி தேயிலைத் தோட்டம் மற்றும் டோர்சில் உள்ள நியூ க்ளென்கோ மற்றும் சூனாகாச்சி தேயிலைத் தோட்டங்களையும் நிர்வகிக்கிறது.[2]

நிலவியல் தொகு

டார்ஜிலிங் சதர் துணைப்பிரிவின் தெற்கு பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள் (ஜோர்பங்லோ சுகியாபோக்ரி சிடி தொகுதி உட்பட), டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மிரிக் துணைப்பிரிவு
CT: கணக்கெடுப்பு நகரம், R: கிராமம்/நகர மையம், NP: தேசியப் பூங்கா/காட்டுயிர் காப்பகம், TE: தேயிலைத் தோட்டம்
பெயர்களில் பயன்படுத்தப்படும் சுருக்கங்கள் – TG -தேயிலைத் தோட்டம் (நகரம்/கிராமம்), TE தேயிலைத் தோட்டம்
சிறிய வரைபடத்தில் உள்ள இடக் கட்டுப்பாடுகள் காரணமாக, பெரிய வரைபடத்தில் உள்ள இடங்கள் சற்று மாறுபடலாம்

கோபால்தாரா தேயிலைத் தோட்டம், "டார்ஜிலிங்கின் பெருமைகளில் ஒன்று". டார்ஜிலிங்கில் டார்ஜிலிங் தேயிலையினை அதிக அளவில் உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மொத்தமுள்ள 320 ha (790 ஏக்கர்கள்), 172 ha (430 ஏக்கர்கள்) தேயிலைப் பயிரிடப்படுகிறது. இந்த தேயிலைத் தோட்டம் 5,500 முதல் 7,000 அடிகள் (1,700 முதல் 2,100 m) உயரத்தில் 60 ha (150 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. டார்ஜிலிங்கின் உயரமான பகுதியும் ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியின் சரியான அளவும் முதிர்ந்த உயர்தர தேயிலை இலைகளுக்கு ஏற்றதாக உள்ளது. இங்குக் காணப்படும் மேக மூட்டம் நறுமணம் நீடிக்க உதவுகிறது. கோபல்தாரா தேயிலைத் தோட்டம் முதல் தரத் தேயிலை உற்பத்தி செய்கிறது. இதில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.[3] அதிக உயரத்தில் குளிர்ச்சியான சூழலின் விளைவாக, தேயிலைச் செடிகள் மெதுவான வேகத்தில் வளரும். பொதுவாகத் தேயிலைத் தோட்டங்கள் தேயிலை செடிகளை 5 ஆண்டுக் கால தேயிலை கவாத்து செய்தல் சுழற்சியைப் பின்பற்றுகிறது. அதிக உயரத்தில் இது 7 வருடச் சுழற்சியாக மாறும்.[4]

குறிப்பு: துணைப்பிரிவில் உள்ள சில குறிப்பிடத்தக்க இடங்களை வரைபடம் காட்டுகிறது. வரைபடத்தில் குறிக்கப்பட்ட அனைத்து இடங்களும் பெரிய முழுத்திரை வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன

மேம்பாடு தொகு

கோபால்தாரா தேயிலைத் தோட்டம் கருப்பு, பச்சை, வெள்ளை, ஊலாங், சுவையூட்டப்பட்ட, சிறப்புத் தேநீர் மற்றும் கைவினைத் தேநீர் போன்ற அனைத்து வகைகளிலும் சிறந்த டார்ஜீலிங் தேயிலையை உற்பத்தி செய்கிறது. புதிய தொழிற்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள உயரமான பகுதிகளில் புதிய ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Gopaldhara Tea Estate – A Darjeeling Tea Garden". Darjeeling Tea Bouquet. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
  2. "Gopaldhara Tea Estate – A Darjeeling Tea Garden". Darjeeling Tea Bouquet. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
  3. "Tea Tasting – Gopaldhara Tea Estate". Salt & Sandals. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
  4. "From Assam to Darjeeling: First stop at Gopaldhara Tea Estate in the Mirik Valley". Tea Snob. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.

வெளி இணைப்புகள் தொகு

  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mirik